தெலுங்கு திரையின் வெற்றி பட இயக்குநர் பூரி ஜெகன்நாத்தின் மகன் ஆகாஷ் பூரி குழந்தை நட்சத்திரமாக பல படங்களில் நடித்துள்ளார். ஆகாஷ் பூரி நாயகனாக அறிமுகமாகும் ஆந்ரா பொறி படத்தினை இயக்குநர் ராஜ் மூதிராஜு இயக்கி வருகின்றார். இப்படத்தில் நடிகை உல்க குப்தா நாயகியாக நடித்து வருகின்றார்.
டைம் பாஸ் என்ற மராத்தி மொழி படத்தின் ரீமேக் ஆன இப்படத்திற்கு இசையமைப்பாளர் ராஜீவ் நாயர் இசையமைத்து வருகின்றார். தயாரிப்பாளர் ரமேஷ் பிரசாத் தயாரித்து வரும் இப்படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்துள்ள நிலையில் இப்படம் மே மாதம் 15 ஆம் தேதி திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ரசிகர்களுக்கு
பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள சரித்திர திரைப்படமான பாகுபாலி திரைப்படமும் மே மாதம் 15 ஆம் தேதி திரைக்கு வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.