மெகா ஸ்டார் குடும்பத்தில் இருந்து வந்த மற்றொரு ஹீரோவான சாய் தரம் தேஜ் நடித்த படம் ரே. இந்த படத்தின் கதை மேற்கு இந்திய தீவிலுள்ள ஜமைக்காவில் தொடங்குகிறது. உலக அளவில் இசையில் பட்டம் வாங்கிய ஒரு பெண் அந்த பட்டத்தை தக்க வைக்க என்னென்ன தவறான வழிகளில் ஈடுபடுகிறார் என்பது தான் கதை.
ஹீரோ ராக் (சாய் தரம் தேஜ்) இந்தியாவில் இருந்து மேற்கு இந்திய தீவில் செட்டில் ஆனவர். தெருக்கூத்து கலைஞரும் ஆவார். வாழ்க்கையில் ஒவ்வொரு நிமிடத்தையும் மகிழ்ச்சியில் கழிக்க நினைக்கும் ராக் தன் கால் போன போக்கில் சென்று கொண்டு இருக்கிறார். மேலும் அவருக்கு பெண் என்றால் பெரிய மதிப்பு ஒன்றும் கிடையாது.
இந்நிலையில் அமெரிக்காவின் மெக்சிகன் பாப் பாடகியான ஜென்னா (சாரதா தாஸ்) பெஸ்ட் ஆப் தி வேல்ட் பட்டத்தை இரண்டு முறை பெற்றவர். அவர் மூன்றாம் முறையும் அந்த பட்டத்தை பெற முயற்சி செய்கிறார். ஆனால் அவருக்கு சந்தி (பார்ஹாத் ஷாநவாஸ்) கடுமையான போட்டியை ஏற்படுத்துகிறார். அவர் போட்டியில் கலந்து கொண்டால் ஜென்னாவால் பட்டம் வாங்குவது அவ்வளவு எளிதான காரியம் அல்ல என்பதனை அறிந்தவர், தன்னுடைய தீவிர ரசிகரும், அன்டர்வேல்ட் டானுமான டாங்கேவை (ஆர்பிட் ரங்கா) தொடர்பு கொள்கிறார். இதனை தொடர்ந்து வில்லன் சந்தியை கொன்று விடுகிறார்.
இந்நிலையில் இந்தியாவில் இருந்து ஜமைக்கா இசை கல்லூரியில் சேர்ந்து உலக பட்டத்தை பெற வருகிறார் ஹீரோயின் அம்ருதா (ஷயாமி கேர்). பட்டத்தை வெல்வது அவருடைய இறந்த சகோதரனின் ஆசையாகும். இதனிடையே அவர் சாய் தரம் தேஜை சந்திக்கிறார்.ஆனால் அவரை கடுமையாக வெறுப்பேத்தி விடுகிறார். போட்டியில் அம்ருதாவை ஜெயிக்க விட கூடாது என்று ஜென்னா எல்லா வழிகளிலும் முயற்சி செய்கிறார்.
இந்நிலையில் ராக்கின் வாழ்கையில் ஒரு சம்பவம் நடைபெறுகிறது. அதன் பிறகு அவருடைய மனநிலையில் பெரிய மாற்றம் ஏற்படுகின்றது. அவர் அம்ருதாவின் லட்சியத்தை நிறைவேற்றுகிறாரா? அவர் மனநிலை மாற என்ன காரணம்? போட்டியில் யார் ஜெயிக்கிறார்? இது தான் படத்தின் இரண்டாம் பகுதியாகும்.
சாய் தரம் தேஜ் தனது நடன அசைவுகளால் பிரமிக்க வைக்கிறார். சண்டை காட்சிகளில் தூள் கிளப்புகிறார். ஷயாமி கேர் கவர்ச்சியாக வலம் வருகிறார். பாப் பாடகியாக வரும் சாரதா தாஸ் அழகாகவும், கவர்ச்சியாகவும் வந்து சிறப்பான ஒரு நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். வில்லன் ஆர்பிட் ரங்கா தனது வேடத்திற்கு வலு சேர்த்துள்ளார். அலியின் நகைச்சுவை ரசிக்க வைக்கின்றது. சக்ரியின் இசை படத்திற்கு மிகபெரிய பலமாக அமைந்துள்ளது. குணசேகரின் ஒளிப்பதிவு சிறப்பாகவே உள்ளது. படத்தின் நீளத்தை குறைத்து இருக்கலாம்.
மொத்தத்தில் ரே ஒரு நீளமான இசை போராட்டம்