பொல்லாதவன் படத்தில் வில்லனாக அறிமுகமானவர் கிஷோர். அதன் பிறகு பல படங்களில் வில்லனாக நடித்தாலும் வனயுத்தம் படத்தில் வீரப்பனாகவும், ஹரிதாஸ் படத்தில் போலீஸ் அதிகாரியாகவும் ஹீரோவாக நடித்தார். தற்போது காதலியை காணவில்லை என்ற படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார். தமிழ் மற்றும் கன்னடத்தில் தயாராகும் இந்தப் படத்தை ரவிராஜா இயக்குகிறார். கிஷோருடன் ஹரிப்ரியா, சோப்ராஜ், பத்மாவசந்தி உள்பட பலர் நடிக்கிறார்கள். தயாள் ஓஷோ ஒளிப்பதிவு செய்கிறார். தேவா இசை அமைக்கிறார்.
"காதலைப் பற்றி நிறைய படங்களில் காட்டிவிட்டார்கள். இது இதுவரையில் யாரும் சொல்லாத புது காதலைச் சொல்கிறோம். நடுத்தர வயது கிஷோருக்கு வரும் காதலையும் அதன் பிரச்சினைகளையும் சொல்லும் படம். படத்தின் கிளைமாக்சை பெங்களூரில் உள்ள கன்டெய்னர் லாரி செட்டில் படமாக்கினோம். நூற்றுக்கணக்கான கன்டெய்னர் லாரிகள், 200 சண்டை கலைஞர்களுடன் கிஷோர் மோதும் காட்சி படமாக்கப்பட்டது. பெரும்பகுதி படப்பிடிப்பு முடிந்து விட்டது" என்கிறார் இயக்குனர் ரவிராஜா.