மூன்று ஆணுக்கும், இரண்டு பெண்ணுக்கும் இடையே நடக்கும் ரொமான்டிக் காமெடி படம் தான் ''பத்மஷியான்''.
கபே ஓனரான தேவ் எனும் சிதாந்த் குப்தா, காதலி நாரி எனும் சுசானா முகர்ஜியிடம் தன் காதலை சொல்லும் தருணத்தில், இவரை விட்டு சென்றுவிடுகிறார். சில மாதங்கள் கழித்து தன் பக்கத்து வீட்டில் இருக்கும் பலக் மெஹ்ரா எனும் குன்ஜன் மல்கோத்ராதை காதலிக்க தொடங்குகிறார். இதற்கிடையே தேவ்வின் நண்பரான பிங்கேஷ் எனும் கரண் மெஹ்ரா, நாரியை கண்டுபிடித்து தன் நண்பனுடன் சேர்த்து வைக்க எண்ணுகிறார். ஆனால் நாரியோ, டான் ஜாசி எனும் ஷாரிப் ஹாஸ்மியை காதலிக்கிறார். அப்போது தான் தெரிகிறது நாரி இதுபோன்று ஆண்களை காதலித்து தன் வலையில் விழ வைத்து ஏமாற்றுபவர் என்பது. இறுதியில் என்ன நடக்கிறது என்பது தான் பத்மஷியான் படத்தின் ரொமான்ட்டிக் காமெடி கதை...!
படத்தில் சுசானா முகர்ஜி. சித்தார்த் குப்தா, கரண் மெஹ்ரா, ஷாரிப் ஹாஸ்மி, குன்ஜன் மல்கோத்ரா என ஐந்து பேர் நடித்துள்ளனர். இவர்களில் ஷாரிப் ஹாஸ்மியின் நடிப்பு தான் அனைவரையும் கவருகிறது. பிலிம்மிஸ்தான் படத்தின் தோல்வியை இந்தப்படத்தில் சரி செய்திருக்கிறார் ஷாரிப். சுசானா, கரண் மெஹ்ரா ஆகியோரின் நடிப்பும் ஓகே.,
இப்படியொரு கதையை ஏன்.? இயக்குநர் அமித் கண்ணா இயக்கினார் என் தெரியவில்லை. எப்படி படம் இயக்கம் வேண்டும், எப்படி காட்சியமைப்புகள் இருக்க வேண்டும் என்று எதுவுமே அவருக்கு தெரியவில்லை என்று எண்ண தோன்றுகிறது. மொத்தத்தில், ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய தவறிவிட்டார் அமித் கண்ணா. படத்திற்கு ப்ளஸே ஔிப்பதிவும், படத்தொகுப்பும் தான். இவை எல்லாம் இருந்தும் என்ன பயன், கதை இல்லையே...!!
மொத்தத்தில், பத்மஷியான் படத்தில் எந்தவொரு பொழுதுபோக்கும் இல்லை... அதனால், இந்தப்படத்தை பார்க்காமல் தவிர்ப்பது நல்லது!