தினமலர் விமர்சனம்
சினிமாவை சமூக வலைதளங்களில் குற்றம் குறை கூறி தாக்குபவர்களை கலாய்க்கும் சினிமாபடம் தான் மசாலா படம் மொத்தமும்.
மசாலா படக்கதைப்படி பிரபல படத்தயாரிப்பாளர் ஒருவர் ., தன் பெரிய பட்ஜெட் மசாலா படத்தை ரிலீஸ் அன்றே "மொக் கப்படம் " என பேஸ்புக் , பிளாக் .. ட்விட்டர் ... உள்ளிட்ட சமூக வலைதளங்களில் ., தாக்கி எழுதிய நவீன உலக நக்கீரர்க ள்.. சிலரை ஒரு தொலைக்காட்சி விவாத மேடையின் நேரலையில் சந்திக்கிறார்.
அவர்களிடம் அந்த தயாரிப்பாள ர் ., ஒருத்திரைப்படம் எடுப்பது எவ்வளவு கஷ்டம் தெரியுமா? அதை கண்டபடி விமர்சித்து தியேட்டருக்கு வருகின்ற ரசிகர் கூட்டத்தை தடுப்பது அயோக்தியத்தனம்... என் கிறார். அதற்கு ,அவரிடம் அந்த இளை ஞர்கள், நேருக்கு நேர் ., கமர்ஷியல் படங்கள் தவறு ... ரியாலிட்டி திரைப்படங்கள் வேண்டும் என்கின்றனர். ரியாலிட்டியைத் தான் நாங்கள் உப்பு , காரம் , கரம் மசாலா சேர்த்துகமர்ஷியல் சினிமாவாகத்தருகிறோம் .. என்கிறார் தயா ரிப்பாளர் . நீங்கள் ரீலில் காட்டுவது ரியல் அல்ல... என்கின்றனர் இன்றைய நவீன உலக நக்கீரர்களான அந்த இளைஞர்கள் ...
ஒரு கட்டத்தில் விவாதம் எல்லை தாண்டி ., முடிந்தால் உங்களால் ஒரு ஆறு மாதத்தில் ஒரு நல்ல கதை தயார் செய்ய முடியுமென் றால் நல்ல கதையை தயார் செய்து வாருங்கள் ... நான் பெரிய பட்ஜெட்டில் படம் தயாரிக்கிறேன்... என சவால் விடுகிறார் அத் தயாரிப்பாளர் .
அந்த சவாலை ஏற்றுக் கொள்ளும் அவர்கள் ., அதற்காக ஒரு மிடில் கிளாஸ் சாதா ., ஒரு லோ கிளாஸ் தாதா ., ஒரு ஹை கிளாஸ் பந்தா ... என வெவ்வேறு வித வாழ்க்கை சூழல் உடைய மூன்று இளைஞர்களை தேர்வு செய்து அவர்களை தங்கள் தோழி மூலம் காதல் வலைக்குள் தள்ளி தோழி யின் மூன்று பேருடனான காதல் அனுபவத்தை கதை யாக்கி ., அந்த தயாரிப்பாளரை அசத்தினார்களா? அல்லது ., அவர்களால் முடியாமல் அசந்தார்களா..? எனும் கதையையே காட்சி படுத்தி மசாலா படமாகத் தந்திருக்கின்றனர்!
மிடில் கிளாஸ் சாதா மணியாக மிர்ச்சி சிவா ., இல்லாமையும், இயலாமையுமாக ., ஏக்கங் கள் நிரம்பிய மிடில் கிளாஸ் மாதவனாக உருக்கமான பாத்திரத்தில் செம்மயாய் நடித்திருக்கிறார். கண்ட கனவுகளும் நிரந்தரமில்லை ... காதலும் நிரந்தரமில்லை ... என்றதும் ., அதை இயல்பாய் எடுத்துக் கொள்ளும் சிவாவின் நடிப்பு ஹேட்ஸ் ஆப் சிவா... என கூவ வைக்கிறது ரசிகனை!
லோ கிளாஸ் தாத வாக கொலை பாதக ரவுடி அமுதனாக பாபி சிம்ஹா., தான் ஏற்று நடித்த ஜிகர்தண்டா பட ரவுடி பாத்திரத்தின் மிச்சசொச்சத்தை மிச்சம் வைக்காமல் இதில் செய்து முடித்திருக்கிறார். ஒரு முரட்டு ரவுடி காதல் வயப்படும் காட்சிகளை நாயகியுடன் சேர்ந்து பக்காவாக நம் கண் முன் நிறுத்தும் சிம்ஹா ., காதலி கையால் சாப்பிடுவதும் ., சாவுக்கு பயப்படாதவர் காதல் வந்த பின் சாவுக்கு பயந்து புலம்புவதும் பலே, பலே .. சொல்லும் விதத்தில் படமாக்கப்பட்டுள்ளன. சிம்ஹாவின் கொலை பாதக முடிவுகளும் அவருக்கு ஏற்படும் இறுதி முடிவும் கொடூரம்.
கிரிஷாக புதுமுகம் கௌரவ் மேல்தட்டு நாகரீகத்தில் மிரட்டலாக மிளிர்ந்திருக்கிறார்.
கதாநாயகி தியாவாக வரும் லட்சுமிதேவி ., நடிப்பிலும், இளமை துடிப்பிலும் தீயாய் வேலை செய்தி ருக் கிறார்... மூன்று நாயகர்களுக்கும் இவர் ஒரே நாயகி, முதல் படத்திலேயே... என்பது அம்மணிக்கு கொடுப்பினை தான். ரசிகனுக்கும் இவரது மப்பும் , மந்தாரமும் செம்ம கொடுப்பனை!
நவீன உலக நக்கீரராக நல் விமர்சகர்கார்த்திக்காக வந்து ., பின் யதார்த்த கதை தேடி நண்பர் களுடன் அலையும் கிரியேட்டீவ் டைரக்டர் கார்த்திக்காகவும் புதியவர் அர்ஜூன் சோமையா ஜூலு பிய்த்து பெடலெடுத்திருக்கிறார். அவரை மாதிரியே கெவின்-பிரசாத், ஹரிணி - ஹரிணி, ஹைட் - ஹைட் கார்த்தி , அப்சர் - அருண் திருமலை, ஹரி- ஸ்ரீனி , தயாரிப்பாளர் - ஆர்.எஸ்.வெங்கட்ராமன் மணி -சிவாவின் நண்பர்களாக வரும் தங்கதுரை, பிரபு, சதா கார்த்திக், நிஜாம், பெற்றோர் பி.ராஜலஷ்மி , சங்கரநாராயணன், அமுதன் - பாபி சிம்ஹாவின் ஆட்கள் பூபால்ராஜ், அப்சர் , பிரவீன் குமார், மணிகண்டன், பாண்டி செல்வம்., குமரன் ,தலைவன் முஜீப், பட்டினப்பாக்கம் ஜெயராமன், கிரிஷ்ஷின் நண்பர்கள் ரேஷ்மா, ஷாம், ஸ்ருதி, மனோ, அத்தை - ரேகா சுரேஷ்,, மாமா -சலபதி ராவ், தியாவின் உயர் அதிகா ரி - ஜோதி, கார்த்திக்கின் அம்மா - ஸ்ரீ லதா, கதிர், ரேடியோ ஆர்ஜே. விஜய் , யாசர் உள்ளிட்டவர்களும் தங்கள் பங்கை சரியாக செய்துள்ளனர்! அதிலும் தயாரிப்பாளராக வரும்ஆர்.எஸ்.வெங்கட் ராமனின் நடிப்பு அசத்தல் !
ரிச்சர்ட் கெவினின் பக்கா படத்தொகுப்பு , க்ளைமாக்சில் மட்டும் அவசரகதியில் செயல்பட்டிருப்பது சற்றே அபத்தமாக தெரிகிறது.
கார்த்திக் ஆச்சார்யாவின் இசை உள்ளிட்ட ப்ளஸ் பாயிண்ட்டுகள் இப்படத்தின் ஒளிப்பதிவாளரும் , இயக்குனருமான லஷ்மன் குமாருக்கு எல்லா விதத்திலும் உறுதுணையாக நின்று மசாலா படத்தை தூக்கி நிறுத்த முயற்சித்துள்ளன... என்றாலும்., தான் கொடுத்த காசிற்கு நல்ல சினிமாவை எதிர்பார்க்கும் ரசிகனை , விமர்சகனை தூக்குவது போல் தூற்றி இருப்பதையும் , யதார்த்தமான கதையை யதார்த்த மனிதர்களின் வாழ்க்கையில் இருந்து எடுக்க., காதலி எல்லாம் செட் பண்ண வேண்டியிருக்கும் ... அப்படி யதார்த்தத்தில் இரு ந்து எடுத்து வந்த கதைக்கு ஒரு முடிவு கூட எழுத தெரியாமல் .,அதை சினிமா கதையாக்க தெரியாமல் ...ஒரு நவீன உலக விமர்சகன் ....தடுமாறுவான், என்பதெல்லாம் ... ஏகத்துக்கும் டிராமா வாக இருக்கிறது.
ஆக மொத்தத்தில் , மசாலா படம் ஆயிரம் இருந்தும், வசதிகள் இருந்தும்., இப்பட டைட்டிலைப் போன்றே மசாலா படமாகவே இருப்பது குறையா? நிறையா ..? என்பதை ரசிகர்கள் தான் சொல்ல வேண்டும்!
நம்மை பொறுத்தவரை மசாலா படம் - மசாலா படமே!!
------------------------------------------------------------------
கல்கி சினி விமர்சனம்
விர்ச்சி சிவா ஆர்ப்பாட்டமில்லாமல் நகைச்சுவையை வெளிப்படுத்துவதில் பேர் பெற்றவர். ஆனால், இந்தப் படத்தில் கடைசி வரை அப்பாவியாகவே இருந்துவிட்டுப்போகிறார்.
தொலைக்காட்சியில் நிகழ்ச்சி லைவ் ஆக நடக்கும்போதே ஒருவர் சவால்விடுவதும், அதை இன்னொருவர் ஏற்பதும் முதலில் ஏதோ படத்தில் பார்த்த நினைவு வருகிறது. சரி! சவாலை ஏற்றதுதான் ஏற்றார்கள்... அதை சாதிக்கும்போது எதிர்கொள்ளும் பிரச்னையைப் படம் சொல்கிறதா என்றால் இல்லை.
மொத்தக் கதையில், கதை பண்ணும் பார்ட்டிகள் பாதி நேரத்தைப் பிடித்துக் கொள்கிறார்கள். மீதி நேரம் மிர்ச்சி சிவா, பாபி சின்ஹா, புதுமுகம் கௌரவ் ஆகிய மூவருக்கும் பிரித்துக் கொடுக்கப்பட்டிருக்கிறது. அதிலிருந்து சிவாவின் பங்களிப்பு எவ்வளவு குறைவானது என்று யூகித்துக் கொள்ளலாம்.
படம்தானே என்கிறார்கள்; பரிட்சையா எழுதுகிறார்கள்? பின்னே படங்களுக்கு ஏன் மார்க் போடுகிறீர்கள்? என்று திரைப்பட விமர்சகர்களுக்கு கொட்டு வைக்கும் காட்சியும் உண்டு.
வெற்றிப் படம் தயாரிக்க என்னென்ன தேவை என்பதைப் பற்றி மிக நீண்ட விளக்கத்தை ஒரு தயாரிப்பாளர் படத்தில் அளிப்பதாக ஒரு காட்சி கடைசியில் இருக்கிறது. அதையாவது இந்தப் படநத்தில் பின்பற்றி இருக்கலாமே!
சிரிக்கவே சிரிக்காத பாபி சின்ஹா முதல் முறையாகப் புன்னகைக்கும்போது குண்டடிப் பட்டுச் சாகிறார். பாடல்கள் மனதில் நிற்கவில்லை.
மசாலா படம் - சாதா படம்.