விமர்சனம்
---------------------------------------------------------------
குமுதம் சினி விமர்சனம்
தளபதி, பில்லா, பாட்ஷா, தலைவா டைப் படத்தில் சூர்யா லிங்குசாமி கூட்டணி இணைந்தால் எப்படி இருக்கும்? அப்படி இருக்கிறது அஞ்சான்.
துரோகியை மன்னிக்கக் கூடாது. அவன் எதிரியிடம் இருந்தால் கூட என்ற ஒற்றை வரியை வைத்துக் கொண்டு உயிர் கொடுத்த நண்பனை தீர்த்துக் கட்டிய கும்பலை ஒவ்வொருவராய்ப் போட்டுத் தள்ளும் கதை! ரொம்ப பழக்கப்பட்ட கதையாக இருந்தாலும் வழக்கம் போல் பட்டையைக் கிளப்பியிருக்கிறார் சிவகுமாரின் புத்திரன்.
கையில் குச்சியுடன் அஞ்சுபவனாய் ஒரு சூர்யா. வாயில் குச்சியுடன் எதற்கும் அஞ்சாதவனாய் ஒரு சூர்யா என்று அந்நியன் ஆட்டம் ஆடியிருக்கிறார். காலை லேசாக இழுத்து அப்பாவியாய் நடந்து, காணாமல் போன அண்ணனை ஓவ்வொரு இடமாக விசாரிக்கும் பவ்யமாகட்டும், அப்படியும் துரத்திப் பிடிக்கும் வில்லன் சுட்டுக் கொல்லச் சொல்லும்போது, குச்சியை கையிலிருந்து உதறி வாயிலிருந்து சுழற்றி எடுத்து சூறாவளி ட்டம் போடுவதாகட்டும் நச்.
என்னோட சாவை நான்தான் முடிவு செய்வேன். உன்னோட சாவையும் நானேதான் முடிவு செய்வேன் பஞ்ச் டயலாக்குகள் பளிச்சிடுகின்றன.
சமந்தா வெண்ணிலா ஐஸ்க்ரீம் மாதிரி இருக்கிறார். ஹிஹி... கோன்கூட உருகுகிறது! தனக்கு ஸ்கின் பிரச்னை எதுவும் இல்லை என்று கழுத்து, மார்பு, இடுப்பு, தொடை என எல்லாப் பகுதிகளையும் திறந்து திறந்து காட்டி சந்தேகத்தைத் தீர்த்து வைத்திருக்கிறார். (சந்தோஷம்தானே?) அந்த டப்பிங் குரலும் செம்மை கிக்.
சூர்யா பாடும் ஏக் தோ தீன் பாட்டு ஒன்ஸ் மோர், சமந்தா சட்டையின் ஒற்றை பட்டனும் எப்போது அவிழ்ந்து விடுமோ என்ற பயம் வருகிறது (நம்புங்கப்பா!)
சூரி இலுப்பைப்பூ சர்க்கரை.
சந்தோஷ் சிவனின் ஒளிப்பதிவும், யுவனின் பின்னணி இசையும், சில்வாவின் சண்டைக் காட்சிகளும் விறுவிறுப்பைக் கூட்டுகிறது.
பல காட்சிகள் ஒரே மாதிரியாக அமைந்து சோர்வை ஏற்படுத்துவதைச் சொல்லியே ஆக வேண்டும். கிளைமேக்ஸில் எதிரியைப் பிடித்த பிறகும் போட்டுத் தள்ளாமல் சூர்யா வசனம் பேசும்போது தியேட்டரில் சிரிக்கிறார்கள்.
நண்பனாக வரும் வித்யுத் ஸ்டைலிஷ், துரோகத்தை காமிச்சுட்டே விசுவாசம்னா என்னான்னு கூடிய சீக்கிரம் பார்ப்பே என்று சொல்லிவிட்டுச் சாகும் காட்சி மனதில் நிற்கிறது.
அஞ்சான் சத்தம் யுத்தம், ரத்தம்!
குமுதம் ரேட்டிங் நன்று
























வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!