Advertisement
நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு »

மதயானைக் கூட்டம்

மதயானைக் கூட்டம்,Madhayaanai Koottam
28 டிச, 2013 - 11:02 IST

 கருத்தைப் பதிவு செய்ய

எழுத்தின் அளவு:
தினமலர் விமர்சனம் » மதயானைக் கூட்டம்

தினமலர் விமர்சனம்


யானைக்கூட்டத்தில் ஒற்றை யானைக்கு மதம் பிடித்தது என்றால் அது கூட்டத்தை விட்டு வெளியில் வந்து எதிர்படும் எல்லாவற்றையும் எப்படி துவம்சம் செய்யும் என்பது எல்லோருக்கும் தெரியும். அப்படிப்பட்ட யானைகள் பல, ஒரே இடத்தில் ஒன்று கூடி ஒருத்தரை பழிவாங்க காத்திருந்தால் எப்படி இருக்கும்? அப்படிப்பட்ட கதைதான் "மதயானைக்கூட்டம் மொத்தப்படமும்! "தேவர் மகன் டைப் பங்காளி பாகஸ்தன் பகைதான் படம் முழுக்க என்றாலும் கள்ளர், தேவர் இனத்து பெருமையை "மதயானைக்கூட்டம் பறைசாற்றுகிறதா? அல்லது அந்த இனத்தினரை சிறுமைப்படுத்தியிருக்கிறாரா? இயக்குநர்? என்பது கடைசிவரை புரியாத புதிர்!

ஊர் பெரிய மனிதர் ஜெயக்கொடித் தேவர் எனும் முருகன்ஜிக்கு, "செவனம்மா - விஜி சந்திரசேகர், "அம்மு - பிரேமா என இரண்டுதாரம். இரண்டுதாரம் என்று ஆனதும் செவனம்மா விஜி, ஜெயக்கொடி முருகன்ஜியுடன் பேசுவது கொள்வது கிடையாது. ஆனாலும் இரண்டாம்தார வாரிசுகள் மீது கொள்ளை கரிசனம். தங்கைக்கு துரோகம் செய்த ஜெயக்கொடிதேவர் மீது குரோதம் இருந்தாலும் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல், ஜெயக்கொடி தேவருக்கு ஊர் தரும் மரியாதைக்கு கட்டுப்பட்டு அவரது இரண்டாம் தாரத்தையும், அவரது வாரிசுகளையும் பழிவாங்க காத்திருக்கிறார்கள் செவனம்மாவின் சகோதரர் வீரத்தேவர் வேல ராமமூர்த்தியும், அவரது வாரிசு மற்றும் கைக்கூலிகளும்.

இந்நிலையில் ஜெயக்கொடித்தேவர் எதிர்பாராமல் அகாலமரணமடைய வீரத்தேவர் விஸ்வரூபம் எடுக்கிறார். இரண்டாம் தாரத்தின் வாரிசு நாயகர் கதிருக்கும், வீரத்தேவருக்கும் ஜெயக்கொடி தேவரின் இறுதிசடங்கில் முட்டல், மோதல் ஏற்படுகிறது. அதில் வாரிசை இழக்கிறார் வீரத்தேவர். அதனால் ஊரைவிட்டு ஓடும் ஹீரோ கதிர், கேரளா சென்று தன் தங்கையின் தோழி ஓவியாவுடன் ஒன்றிரண்டு டூயட் பாடிவிட்டு ஊர் திரும்பினால், இவரது அம்மா இறந்த செய்தி வருகிறது. அம்மாவை அடக்கம் செய்துவிட்டு, அம்மாவை கொன்ற வீரத்தேவர் கோஷ்டியை பழிதீர்க்க பாயும் நாயகர் கதிர், பழிதீர்த்தாரா? பலிவாங்கப்பட்டாரா..? என்பது க்ளைமாக்ஸ்!

வித்தியாசமாக ஜெயக்கொடித்தேவரின் சாவு வீட்டில் ஆட்டம், பாட்டம் கொண்டாட்டமென ஆரம்பமாகும் "மதயானைக்கூட்டம் காதல், பாசம், வீரம், துரோகம், "சென்டிமெண்ட் என பயணித்து இறுதியில் நாயகரையும், அவரது காதலையும் காவு வாங்கி "புஸ் ஸென முடிவது தவிர ஆரம்பம் முதல் இறுதிவரை விறுவிறு என வித்தியாசமான களத்தில் பிரயாணிப்பது தமிழ் சினிமாவுக்கு புதுசு. க்ளைமாக்ஸில் செவனம்மா, அண்ணன் வீரத்தேவரை தீர்த்துகட்டி கதிரையும், அவரது அம்மா அம்மு - பிரேமாவையும் காபந்து செய்திருந்தார் என்றால் வித்தியாசமாக இருந்திருக்கும். அவ்வாறு இல்லாதது பலவீனம்!

நாயகன் பார்த்தியாக கண்களிலேயே நடிப்பை வழியவிடும் அறிமுகம் கதிர், மந்தஹாசப்புன்னகையுடன் "மப்பும் மந்தாரமாக ஓவியா, படத்தில் வரும் கேரளா மாதிரியே அம்மணியும் வனப்பு", செவனம்மாவாக கண்களிலேயே வீரத்தையும், பாசத்தையும் ஒருங்கே காண்பிக்கும் செவனம்மாவாக விஜி சந்திரசேகர், ஜெயக்கொடித்தேவராக கம்பீரமும், கனிவுமாக முருகன்ஜி, கூடி, குடிக்கும் கேரக்டரில் வீரத்தேவராக எழுத்தாளர் வேல.ராமமூர்த்தி என எல்லோரும் பாத்திரமறிந்து பளிச்சிட்டிருக்கின்றனர். வேல.ராமமூர்த்தி கடைசிவரை மதயானைக்கூட்டத்து குள்ளநரியை கண்டுபிடிக்காதது ஏமாற்றம்!

ரகுநந்தனின் உயிரோட்டமான இசை, ராகுல் தருமனின் ஓவியம் மாதிரியான ஒளிப்பதிவு எல்லாம் இருந்தும் படம் முழுக்க, அடி, உதையும் அருவாளும் ஆயுதமுமாக ஒரே இரத்தசகதியாக தெரிவது மதயானைக்கூட்டத்தின் ப்ளஸ்ஸா? மைனஸா? தெரியவில்லை! புரியவில்லை!!

ஆகமொத்தத்தில், விக்ரம் சுகுமாரனின் எழுத்து-இயக்கத்தில், "மதயானைக்கூட்டம் - ஒரு ஜாதிக்குள்ளேயே நடக்கும் "சதி வெறியாட்டம்!



--------------------------------------------------------------------



நமது தினமலர் இணையதளத்தின் சினிமா பகுதியில், பல படங்களின் விமர்சனங்கள் வெளிவந்து கொண்டு இருக்கின்றன. சில வாசகர்கள் தங்களது பிளாக்குகளில் திரைப்படங்களின் விமர்சனங்களை வெளியிட்டு வருகின்றனர். அவர்களை ஊக்குவிக்கும் பொருட்டு, வாசகர்களின் விமர்சனங்களும் தினமலர் இணையதள சினிமா பகுதியில் இடம்பெறும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்...

வாசகர் சி.பி.செந்தில் குமாரின் விமர்சனம்

அவரது பிளாக் முகவரி : www.adrasaka.com


கிராமிய மண் மனம் கமழும் படங்கள் மக்கள் மனதைக்கவர என்றுமே தவறியதில்லை. பாரதிராஜா, அமீர்-ன் பருத்திவீரன் பாணியில் வந்திருக்கும் இந்தப்படமும் தமிழ் சினிமாவின் முக்கியமான மைல் கல் படமே. குறிப்பிட்ட ஒரு இனத்தின், கலாச்சாரத்தை, பழக்கவழக்கங்களை நேரில் நாம் பார்ப்பது போன்ற உணர்வைத் தந்து பிரமாதமாக இயக்கிய விக்ரம் சுகுமாரன்க்கு ஒருஷொட்டு. இவர் பாலுமகேந்திராவிடம் தொழில்கற்றவர். தேசிய விருது வாங்கிய ஆடுகளம் வசனகர்த்தா. ஒத்தைக்கண்ணால, பாட்டுக்கு தனுஷ் ஆடும் லுங்கி டான்ஸ் ஐடியா இவருதுதான்.

ஹீரோவோட அப்பாவின் மரணத்தில் கதை துவங்குது.கேரக்டர்களை, வில்லுப்பாட்டு மூலம் அறிமுகப்படுத்திட்டே வர்றாங்க. ஹீரோவோட அப்பாவுக்கு 2 சம்சாரம். முதல் சம்சாரத்துக்கு ஒரு அண்ணன். 2வது சம்சாரத்தோட ஜென்மப்பகைபாராட்டிவர்றார் முத சம்சாரத்தோட அண்ணன். அக்னி நட்சத்திரம் படத்தில் வரும் காத்திக், பிரபு, மாதிரி அண்ணன் தம்பிங்க அடிச்சுக்காம ஒத்துமையா இருப்பதும் இரு தாரங்களும் அனுசரணையா இருப்பதும் தமிழ்சினிமாவுக்குப்புதுசு.

ஹீரோவோட அப்பாவின் மரணத்தின்போது, இழவு காண வரும் சொந்தங்கள் ரகளைல அடிதடில எதிர்பாரதவிதமா விபத்தா முதல் சம்சாரத்தோட அண்ணன் மகன் இறந்துடறார்.கொலைப்பழி, ஹீரோமேல விழுது. அதுக்குப்பழி வாங்க நடக்கும் சேசிங்க் தான் மிச்ச மீதி திரைக்கதை.

ஹீரோவின் அப்பாவின் முதல் சம்சாரத்தின் அண்ணனாக வரும் வீரத்தேவராக எழுத்தாளர் வேல.ராமமூர்த்தி, பாடிலேங்குவேஜில் கலக்கி இருக்கிறார். அவருக்குத்தான் முதல் மார்க். மீசையை முறுக்கி ஒரு பார்வை பார்த்தாலே பயம் தொத்திக்குது. செவனம்மாவாக கண்களிலேயே வீரத்தையும், பாசத்தையும் ஒருங்கே காண்பிக்கும் முத சம்சாரம் செவனம்மாவாக விஜி சந்திரசேகர்க்குஅடுத்த இடம்.

அறிமுகம் கதிர் இயல்பா பண்ணி இருக்கார். படம் முழுக்க சாந்த சொரூபியாக வரும் அவர் க்ளைமாக்சில் மொட்டை அடித்த பின் சூர்யன் சரத்குமார் மாதிரி அடித்துதூள் பரத்துவது நம்பும்படி இல்லை. அவருக்கு ஜோடியாக வரும் கேரளத்துக்கன்னி ஓவியா, கண்முன் நிற்கிறார். (உக்காருங்க)

சி.பி.கமெண்ட் - மதயானைக்கூட்டம் = கிராமிய மண் மணம் கமழும் பேமிலி க்ரைம் த்ரில்லர். டோண்ட் மிஸ் இட்.



வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g  to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement

மேலும் விமர்சனம்

  • டாப் 5 படங்கள்

  • Advertisement
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in