ராஷ்மிகாவின் 'தி கேர்ள் பிரண்ட்' நவம்பர் 7 வெளியீடு | 'பாகுபலி எபிக்' ரிலீஸ் : ஓடிடியில் தூக்கப்பட்ட 'பாகுபலி 1, 2' | ரவி மோகன் நடிக்கும் 'ப்ரோ கோட்' படத் தலைப்பு வழக்கு : நீதிமன்றம் உத்தரவு | ரஜினி, ஸ்ரீதேவி மாதிரி பிரதீப் ரங்கநாதன், மமிதா : டியூட் பட இயக்குனர் பேட்டி | அப்பா இறுதி ஊர்வலத்தில் அம்மா ஆடியது ஏன்? : ரோபோ சங்கர் மகள் பேட்டி | மீண்டும் பெரிய திரையில் ஐரா அகர்வால் | பிளாஷ்பேக் : உதவியாளருக்காக திரைக்கதை எழுதிய பாக்யராஜ் | பிளாஷ்பேக் : ஜெயித்த பிச்சைக்காரி, தோற்ற பணக்காரி | யு டியூப்பில் வெளியிடப்பட்ட திருக்குறள் | லோகா ஒளிப்பதிவாளருக்கு விலை உயர்ந்த வாட்ச் பரிசளித்த கல்யாணி பிரியதர்ஷன் |
ஹிந்தித் திரையுலகின் கனவுக் கன்னியரில் ஒருவராக இருந்தவர் மாதுரி தீட்சித். 80களின் மத்தியில் சினிமாவில் அறிமுகமாகி அடுத்த சில வருடங்களில் தனது நடிப்பாலும், நடனத்தாலும், அழகாலும் பல வெற்றிப் படங்களில் நடித்தவர். பல முன்னணி ஹீரோக்களுடன் நடித்துள்ளார்.
1999ம் ஆண்டு இதய அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் ஸ்ரீராம் மாதவ் நேநே என்வரைத் திருமணம் செய்து கொண்டார். அதன்பின் இந்தியாவை விட்டுச் சென்று அமெரிக்காவில் செட்டிலானார். இரண்டு குழந்தைகளுக்குத் தாயான மாதுரி தீட்சித் 2011ம் ஆண்டு மும்பை திரும்பி அங்கேயே செட்டிலானார்.
கடந்த சில வருடங்களாக மீண்டும் சினிமாவிலும் நடித்து வருகிறார். டிவிக்களிலும் நடுவராக இருக்கிறார். தற்போது 'டான்ஸ் துவானே' என்ற நடனப் போட்டி நிகழ்ச்சியின் நடுவர்களில் ஒருவராக இருக்கிறார். இந்நிலையில் நேற்று 'மீண்டும் ஆக்ஷனில்' என்று சொல்லி தன்னுடைய இரண்டு புகைப்படங்களைப் பதிவிட்டுள்ளார். அவற்றைப் பார்த்தால் மாதுரிக்கு 54 வயதாகிவிட்டது என்று யாரும் சொல்ல மாட்டார்கள். அவ்வளவு இளமையாக இருக்கிறார்.