2025ல் தமிழ் சினிமா: இப்படியே போய்விடுமா ??? | இந்த வாரமும் இத்தனை படங்கள் வெளியீடா... தாங்குமா...? | தமனின் கிரிக்கெட்டைப் பாராட்டிய சச்சின் டெண்டுல்கர் | 300 கோடியைக் கடந்த 3வது படம் 'ஓஜி' | பழம்பெரும் பாலிவுட் நடிகை சந்தியா சாந்தாராம் காலமானார் | ரஜினி திடீர் இமயமலை பயணம் | ஆக்ஷன் ஹீரோயினாக விரும்பும் அக்ஷரா ரெட்டி | பிளாஷ்பேக்: 400 படங்களில் நடித்த கோவை செந்தில் | 300 கோடி வசூல் சாதனை புரிந்த 'லோகா' | பிளாஷ்பேக்: முதல் நட்சத்திர ஒளிப்பதிவாளர் |
பாலிவுட்டின் பிரபல தயாரிப்பாளர் கரண் ஜோஹர் தனது தர்மா புரொடக்சன்ஸ் சார்பில் படங்களை தயாரித்தும் மற்ற படங்களை வாங்கி வெளியிட்டும் வருகிறார். குறிப்பாக லைகா நிறுவனத்துடன் இணைந்து பயணிக்க விரும்பிய கரண் ஜோஹர், லைகா தயாரித்த 2.0 படத்தை இந்தியில் வெளியிட்டார். இந்நிலையில் தற்போது லைகாவிடம் இருந்து ஒதுங்கி, ஜியோ நிறுவனத்துடன் கூட்டணி சேர்ந்து கொண்டுள்ளார் கரண் ஜோஹர். இதனால் லைகா நிறுவனம் டென்சன் ஆனதாக தெரிகிறது.
தற்போது அக்சய் குமார் நடித்து வரும் ராம் சேது படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவராக லைகா நிறுவனம், தன்னை இணைத்துக் கொன்டதே கரண் ஜோஹர் சொல்லித்தானாம். ஆனால் அவர் தங்களிடமிருந்து விலகியதால், தற்போது ராம்சேது பட மெயின் தயாரிப்பளருக்கு பணம் தருவதை நிறுத்தி வைத்திருக்கிறதாம் லைகா. இதனால் அக்சய் குமாருக்கு கொடுக்கப்பட்ட 30 கோடி ரூபாய் செக் ஒன்று, வங்கியிலிருந்து பணமில்லாமல் திரும்பி வந்துவிட்டதாக சொல்லப்படுகிறது.. ஆனால் அக்சய் குமார் தரப்பிலோ, அப்படியெல்லாம் எதுவும் இல்லை என மறுக்கிறார்களாம்.