Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

பிரபுதேவாவுடன் டான்ஸ் ஆட முடியாது! சோனாஷி சின்ஹா!!

22 ஆக, 2012 - 10:45 IST
எழுத்தின் அளவு:

பிரபுதேவாவுடன் டான்ஸ் ஆடவே முடியாது என்று பாலிவுட் நடிகை சோனாஷி சின்ஹா கூறியுள்ளார்.  நடிகர் அக்ஷய் குமார் நடிக்கும் ஓ மை காட் படத்தில் கெஸ்ட் ரோலில் வருகிறார் சோனாக்ஷி. அதாவது அவரும் பிரபுதேவாவும் இணைந்து கோ கோ கோவி்ந்தா என்ற பாடலுக்கு கெட்ட ஆட்டம் போட்டுள்ளனர்.

பிரபுதேவாவுடன் ஆடிய அனுபவம் குறித்து சோனாக்ஷி கூறுகையில், பிரபுதேவா சார் நமக்கு டான்ஸ் சொல்லிக் கொடுக்கும் வரை எந்தப் பிரச்சினையும் இல்லை. அவர் ஜாலியாக சொல்லிக் கொடுப்பார். அவர் சொல்லிக் கொடுப்பதை அப்படியே செய்தால் போதும். ஆனால் அவர் நம்முடன் சேர்ந்து டான்ஸ் ஆட வந்து விட்டால் நாம் செத்தோம். அவர் ஒரு அபாரமான ஆட்டக்காரர். அவருடன் இணைந்து ஆடுவது என்பதை நினைத்தாலே நடுங்கிப் போய் விடும். இருந்தாலும் அவருக்கு இணையாக ஓரளவுக்காவது ஆடினால்தான் நாம் பிழைத்தோம். அவருடன் இணைந்து ஆடும்போது தானாகே நமது டான்ஸும் சிறப்பாக மாறி விடுகிறது, என்றார் சோனாக்ஷி. 

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் க்ரிஷ்- 4 : பவர்புல் வில்லனாக மாறும் ஹிருத்திக் ரோஷன் க்ரிஷ்- 4 : பவர்புல் வில்லனாக மாறும் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)