Advertisement

சிறப்புச்செய்திகள்

புதிய கதைகளை தேடி செல்லும் சிம்பு! | பிரதீப் ரங்கநாதன், அஸ்வத் கூட்டணியில் உருவாகும் டிராகன் படம்! | மீண்டும் ஹிந்துவாக மாறிய இசையமைப்பாளர் ஜிப்ரான்! | 'மணிசித்திரதாழு' படத்தை 50 முறை பார்த்தேன்- போஸ்டருடன் செல்வராகவன் வெளியிட்ட பதிவு! | துருவ் விக்ரம் நடிக்கும் புதிய படத்தின் அப்டேட்டை வெளியிட்ட விக்ரம்! | கடற்கரையில் பிகினியில் நீராடும் கங்குவா நாயகி திஷா பதானி! | மீண்டும் இணைந்த விஜய் தேவரகொண்டா - தில் ராஜூ | தள்ளிப்போகும் இந்தியன் 2 ... அதே தேதியை குறிவைக்கும் ராயன்? | விஜய் 69வது படத்தை தயாரிக்கும் யஷ் பட தயாரிப்பாளர்? | ‛மஞ்சும்மல் பாய்ஸ்' படம் தந்த பாடம்: நடிகர் சித்தார்த் அருண்பாண்டியன் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

நட்சத்திர கூட்டத்திற்கு மாதுரி தீட்சித் பெயர்...!

18 ஜூன், 2012 - 03:07 IST
எழுத்தின் அளவு:

பாலிவுட்டில் நட்சத்திரமாய் ஜொலித்த இந்தி நடிகை மாதுரி தீட்சித்திற்கு இப்போது ஆகாயத்திலும் நட்சத்திர அந்தஸ்த்து கிடைத்து இருக்கிறது. ஆம்! விண்வெளியில் உள்ள நட்சத்திர கூட்டத்திற்கு அவரது பெயர் சூட்டப்பட்டுள்ளது. அபோத் என்ற படம் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை மாதுரி தீட்சித். தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்து பாலிவுட் ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வந்தார். தற்போது 45 வயது ஆனாலும் கூட இன்றும் இளமை மாறாமல் அப்படியே இருக்கிறார். இன்றளவும் அவரது பிறந்தநாளை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

பிலிம்பேர், ‌பத்மஸ்ரீ உள்ளிட்ட பல்வேறு விருதுகளை பெற்ற மாதுரிக்கு, சமீபத்தில் லண்டன் மியூசியத்தில் சிலை வைத்து கவுரவிக்கப்பட்டார். இந்நிலையில் அவருக்கு மேலும் ஒரு கவுரவம் கிடைத்து இருக்கிறது. விண்வெளியில் உள்ள நட்சத்திர கூட்டத்திற்கு அவரது பெயர் வைக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் மாதுரி டி.வி., நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றபோது, இதற்கான சான்றுகளை அவரது ரசிகர்கள் வழங்கியுள்ளனர். ஸ்டார் பவுண்டேசன் என்ற அமைப்பு இதனை வழங்கி இருக்கிறது.

இதுகுறித்து மாதுரி தீட்சித் தன்னுடைய வலைதளத்தில் கூறியிருப்பதாவது, ஓரியான் என்ற விண்மீன் கூட்டத்தில் உள்ள நட்சத்திரம் ஒன்றுக்க எனது பெயர் வைக்கப்பட்டுள்ளது. இதனை மிகப்பெரிய கவுரவமாக கருதுகிறேன். இதற்காக எனது ரசிகர்களுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன் என்று கூறியுள்ளார். மேலும் அதற்கான சான்றுகளையும் தன்னுடைய வலைதளத்தில் இணைத்துள்ளார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் க்ரிஷ்- 4 : பவர்புல் வில்லனாக மாறும் ஹிருத்திக் ரோஷன் க்ரிஷ்- 4 : பவர்புல் வில்லனாக மாறும் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)