தயாரிப்பாளர் தக்காளி சீனிவாசன் காலமானார் | போர் சூழலுக்கு மத்தியில் சென்னை திரும்பினார் நடிகர் அஜித்குமார் | பிரியா பவானி சங்கரை தொடர்ந்து ரவிதேஜா படத்தில் இணைந்த தமன்னா! | இன்வெஸ்டிகேஷன் திரில்லர் படத்தில் நடிக்கும் குமரன் | சூப்பர் நேச்சுரல் கிரைம் திரில்லராக உருவாகும் 'மண்டவெட்டி' | தனுசுக்கு ஜோடியாகும் நடிக்கும் ருக்மணி வசந்த்! | 'ஆர்யா 40' படத்தில் இரு நாயகிகள் | 'டென்ஷன்' படத்தில் காமெடி கலந்த வில்லனாக ஆர்.கே.வரதராஜ் | 'ஜெயிலர் 2' படத்தில் ஷாருக்கான் கதாபாத்திரம் என்ன தெரியுமா? | அனிமேஷன் படத்தை இயக்குகிறாரா அனில் ரவிபுடி? |

பிரபல பாலிவுட் நடிகை சுஷ்மிதா சென். 1994ம் ஆண்டு பிரபஞ்ச அழகி பட்டம் வென்று சினிமாவுக்கு வந்தார். தமிழில் ரட்சகன் என்ற படத்தில் நாகார்ஜுனாவுடன் நடித்தார். முதல்வன் படத்தில் ஒரு பாடலுக்கு ஆடினார். பாலிவுட்டில் 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தார்.
42 வயதாகும் சுஷ்மிதா திருமணம் செய்து கொள்ளவில்லை. ஆனால் 2 குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்து வருகிறார். சுஷ்மிதா இன்று வரை தனது அழகு குறையாமல் பாதுகாத்து வருகிறார். கடந்த சில தினங்களுக்கு முன்பு தனது டுவிட்டரில் தனது முதுகை காட்டியபடி நின்று ஒரு படத்தை வெளியிட்டிருந்தார். "பெரிய முடிவுகளை காண சிறிய கவனம் செலுத்த வேண்டும்" என்று குறிப்பிட்டிருந்தார். இது பலருக்கு புரியவில்லை.
இப்போது வெளிநாட்டிற்கு சென்று முகத்திற்கு பிளாஷ்டிக் அறுவை சிகிச்சை செய்து கொண்டிருக்கிறார். பிளாஷ்டிக் சிகிச்சைக்கு பிறகான தனது படத்தை டுவிட்டரில் வெளியிட்டுள்ளார்.
அது ரசிகர்களுக்கு பிடிக்கவில்லை. "ஏன் மேடம் வேண்டாத வேலை". "முன்னாடிதான் அழகா இருந்தீங்க" என்று வருத்தத்துடன் பதிவிட்டு வருகிறார்கள் ரசிகர்கள்.