விஜய் நடித்த 'உன்னை நினைத்து' காட்சிகளைப் பகிர்ந்த விக்ரமன் | ஜன.,10க்கு தள்ளிப்போகிறதா 'ஜனநாயகன்'? | 'அகண்டா 2' மாதிரி ஆகிடுமா ஜனநாயகன் | ஜனவரி 30ல் வெளியாகும் ஜீத்து ஜோசப் படம் | நஷ்டமடைந்த 'ஏஜென்ட்' பட தயாரிப்பாளர், வினியோகஸ்தர்களுக்கு அகில் கொடுத்த வாக்குறுதி | ஆயிரம் படங்களில் நடித்த மூத்த மலையாள நடிகர் காலமானார் | 'மன சங்கர வர பிரசாத் காரு' படத்தின் மெகா புரமோஷனில் சிரஞ்சீவி கலந்து கொள்வாரா? | மூன்று வருடங்களுக்குப் பிறகு விஜய் பட நடிகையிடம் மன்னிப்பு கேட்ட புஷ்பா நடிகை | மீண்டும் சந்தித்த 'படையப்பா' படை | திரைப்பட பாடலாக உருவான சீமானின் மேடை பாட்டு |

பிரபல பாலிவுட் நடிகர் ஜான் ஆபிரஹாம் நடித்துள்ள படம், சத்தியமேவ ஜெயதேவ். இதில், அவருடன் மனோஜ் பாஜ்பாய், அர்முதா, ஆயிஷா சர்மா நடித்துள்ளனர். மிலப் மிலன் சவேரி இயக்கி உள்ளார். டி.சீரிஸ் மற்றும் எம்மி என்டர்டெயின்ட்மென்ட் நிறுவனங்கள் தயாரித்துள்ளது. படம் வருகிற 15ம் தேதி வெளிவருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன் டிரைலர் சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதில், இஸ்லாமிய சமூகத்தினரின் மனதை புண்படுத்தும் காட்சிகள் இருப்பதாக ஐதராபாத்தை சேர்ந்த சய்யது அலீப் ஜாப்ரி என்பவர் தபீர் புரா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அவர் அளித்துள்ள புகார் மனுவில், "இஸ்லாமிய சமூகத்திற்கு எதிரான காட்சிகள் டிரைலரில் உள்ளது. இது இரு மதத்தினரிடையே மோதலை உண்டாக்குவதாக இருக்கிறது. படத்தை நீதிபதிகள் பார்த்து சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்கிய பிறகே படத்தை வெளியிட வேண்டும்" என்று கூறப்பட்டுள்ளது. மனுவை ஏற்றுக் கொண்ட போலீசார் குறிப்பிட்ட மதத்தை இழிவுபடுத்துதல், மத மோதல்களை உருவாக்குதல் என இரு பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.