ஹரிஷ் கல்யாண் நடிக்கும் 'தாஷமக்கான்' | மணிரத்னம் படத்தில் நடிக்க மறுத்தாரா சாய் பல்லவி? | நெட்பிளிக்ஸ் முடிவு : அதிர்ச்சியில் தென்னிந்திய திரையுலகம் | விமலின் மகாசேனா படம் டிசம்பர் 12ல் திரைக்கு வருகிறது | பராசக்தி பட டப்பிங்கில் அதர்வா | கோவா சர்வதேச பட விழாவில் அமரன் : சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி | எங்களைப் பொறுத்தவரை உபேந்திரா தெலுங்கின் சூப்பர் ஹீரோ தான் : ராம் பொத்தினேனி | ப்ரோ கோட் டைட்டில் விவகாரம் : நீதிமன்ற விசாரணையில் ரவி மோகனுக்கு சாதகம் | ‛கில்' பட ரீமேக்கில் இருந்து விலகிய துருவ் விக்ரம் | வாட்ச் மீதுள்ள காதல் குறித்து தனுஷ் |

ராணி முகர்ஜி, கதையின் நாயகியாக நடித்து வெளிவர உள்ள படம் ஹிச்சிகி. சித்தார்த் மல்கோத்ரா இயக்கி உள்ளார். யாஸ் ராஜ் பிலிம்ஸ் சார்பில் மனீஷ் சர்மா தயாரிக்கிறார். இப்படம் வருகிற பிப்., 23-ம் தேதி ரிலீஸாவதாக அறிவித்திருந்தனர். ஆனால், திடீரென படத்தின் ரிலீஸ் தேதியை தள்ளி வைத்திருக்கிறார்கள்.
இதுகுறித்து தயாரிப்பாளர் மனீஷ் சர்மா கூறுகையில், ஹிச்சிகி படம் முழுக்க முழுக்க குடும்ப படமாக உருவாகி உள்ளது. அனைத்து தரப்பு ரசிகர்களும் கவரும் வகையில் இந்தப்படம் இருக்கும். மாணவர்களுக்கு தேர்வு நடைபெற இருப்பதால் அதை கருத்தில் கொண்டு, அவர்களும் வந்து படம் பார்க்கும் விதமாக மார்ச் 23-ம் தேதி படம் ரிலீஸாக உள்ளது என்றார்.