ஹீரோவாக மாறும் காமெடியன் ரவி மரியா: ஹீரோயின் தேடும் பணி தீவிரம் | ஜனநாயகன் முதல் காட்சி டிக்கெட் விலை எவ்வளவு : இதுதான் கோலிவுட்டில் ஹாட் டாக் | மோகன்லாலின் தாயார் சாந்தகுமாரி காலமானார் | சரஸ்வதி பட படப்பிடிப்பை நிறைவு செய்த வரலட்சுமி | ஊட்டுகுளங்கரா பகவதி கோவிலில் அஜித் வழிபாடு | கண்ணீரை வரவழைத்தது : சிறை படத்தை பாராட்டிய இயக்குனர் ஷங்கர் | வடமாநில இளைஞரை வெட்டிய போதை ஆசாமிகள் : மாரி செல்வராஜ் கடும் கண்டனம் | 2025 முதல் வெற்றி 'மதகஜராஜா': கடைசி வெற்றி 'சிறை' | தொழில் அதிபரிடம் ரூ.10 லட்சம் மோசடி : சொகுசு காருடன் மாயமான 'டிவி' நடிகை | சீரியல் நடிகை நந்தினி தற்கொலை |

அமீர்கான் நடிப்பில் இந்த கிறிஸ்துமஸ் விருந்தாக வெளிவர இருக்கும் படம் ‛டங்கல்'. அமீர்கான், மல்யுத்த வீரர் போகத்தாக, மூன்று பெண் குழந்தைகளுக்கு அப்பாவாக நடித்திருக்கிறார். இந்தப்படத்திற்காக உடல் எடையை குறைத்து, அதிகரித்து, அதிக மெனகெட்டு நடித்திருக்கிறார் அமீர். தற்போது டங்கல் படத்தின் புரொமோஷனில் பிஸியாக ஈடுபட்டிருக்கும் அமீரிடத்தில் ஒரு பேட்டியில், உங்களுக்கு ‛மிஸ்டர் பெர்பெக்சனிஸ்ட' (கச்சிதமான நடிகர்) டைட்டீல் பற்றி கேட்டபோது, அமீர் கூறியதாவது...
‛மிஸ்டர் பெர்பெக்சனிஸ்ட' (கச்சிதமான நடிகர்) டைட்டீல் எனக்கு பொருந்தாது, ஏனென்றால் நான் அதற்கு தகுதியானவன் கிடையாது. அதற்கு பதிலாக ‛மிஸ்டர் பேசனைட்' (உணர்ச்சிகரமான நடிகர்) என்ற டைட்டீல் வேண்டுமானால் வழங்கலாம், அது தான் எனக்கு பொருத்தமாக இருக்கும்'' என்று கூறியுள்ளார்.