பொங்கல் நாள் வாழ்த்துகளைக் குவித்த படங்கள் | ஜனவரி 23ல் நிவின்பாலியின் 'பேபி கேர்ள்' ரிலீஸ் | ஜெயராம், காளிதாஸ் இணைந்து நடத்துள்ள படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | ரம்பா மகளா இவர்?; பிறந்தநாள் கொண்டாடிய லான்யா | மலையாள 'எக்கோ' பட நடிகையை பாராட்டிய தனுஷ் | 'திரிஷ்யம் 3' படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்த மோகன்லால் | எனக்கு நானே போட்டி: கிர்த்தி ஷெட்டியின் தன்னம்பிக்கை | விஜே சித்துவின் 'டயங்கரம்' படத்தின் முதல் பார்வை வெளியானது! | தனுஷ் 54வது படத்தின் தலைப்பு 'கர' | அருள்நிதி, ஆரவ் இணைந்து நடிக்கும் 'அருள்வான்' |
நியூமராலஜி காரணமாக பெயரை மாற்றிய இஷா கோபிகர், பெயர் மாற்றத்தால் எந்த மாற்றமும் ஏற்படாததால், மீண்டும் தன் பெயரை மாற்றியிருக்கிறார். பிரபல பாலிவுட் நடிகை இஷா கோபிகர். அவ்வப்போது தமிழிலும் வந்து தலைகாட்டிவிட்டு போவார். நியூமராலஜிபடி பெயரை மாற்றினால் வெற்றி மேல் வெற்றி கிட்டும் என்று யாரோ சொல்ல, தனது பெயரை ஈஷா என்று மாற்றினார். ஆனால் அப்படியும் ஒன்றும் நடக்காததால் தனது பெயரை மீண்டும் இஷா என்றே மாற்றியுள்ளார்.
இதுகுறித்து அவர் அளித்துள்ள பேட்டியில், நான் எனது பெயரை மறுபடியும் இஷா கோபிகர் என்றே மாற்றியுள்ளேன். நியூமராலஜி படித்தான் ஈஷா என்று மாற்றினேன். அதில் எந்தவித பலனும் கிடைக்கவில்லை. அதனால் மீண்டும் என் சொந்த பெயரையே எனக்கு வைத்துள்ளேன், என்று கூறியுள்ளார்.
நடிகை இஷா கோபிகர் தற்போது, ராம் கோபால் வர்மாவின் ஷப்ரி என்ற படம் மூலம் பாலிவுட்டில் மறுபிரவேசம் செய்கிறார். இந்த படம் வரும் 26ம்தேதி ரிலீஸ் ஆகிறது.