மும்பையைச் சேர்ந்த மாடலான இவர் கன்னடம், தெலுங்கு, தமிழ், மராத்தி, இந்தி ஆகிய மொழிகளில் நடித்துள்ளார். 1998ம் ஆண்டு காதல் கவிதை படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். பின்னர் என் சுவாச காற்றே, நெஞ்சினிலே,நரசிம்மா ஆகிய படங்களில் நடித்த இவர், ஜோடி படத்தில் கவுரவ வேடத்திலும் நடித்துள்ளார். தொடர்ந்து பாலிவுட்டிற்கு சென்ற இவர், ஹம் தும், கேர்ள் பிரண்ட், டி, ஏக் சி பத்கர் ஏக், கிருஷ்ணா காட்டேஜ் உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.