Advertisement

சிறப்புச்செய்திகள்

புதிய கதைகளை தேடி செல்லும் சிம்பு! | பிரதீப் ரங்கநாதன், அஸ்வத் கூட்டணியில் உருவாகும் டிராகன் படம்! | மீண்டும் ஹிந்துவாக மாறிய இசையமைப்பாளர் ஜிப்ரான்! | 'மணிசித்திரதாழு' படத்தை 50 முறை பார்த்தேன்- போஸ்டருடன் செல்வராகவன் வெளியிட்ட பதிவு! | துருவ் விக்ரம் நடிக்கும் புதிய படத்தின் அப்டேட்டை வெளியிட்ட விக்ரம்! | கடற்கரையில் பிகினியில் நீராடும் கங்குவா நாயகி திஷா பதானி! | மீண்டும் இணைந்த விஜய் தேவரகொண்டா - தில் ராஜூ | தள்ளிப்போகும் இந்தியன் 2 ... அதே தேதியை குறிவைக்கும் ராயன்? | விஜய் 69வது படத்தை தயாரிக்கும் யஷ் பட தயாரிப்பாளர்? | ‛மஞ்சும்மல் பாய்ஸ்' படம் தந்த பாடம்: நடிகர் சித்தார்த் அருண்பாண்டியன் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

ராதே மா கேரக்டரில் மல்லிகா ஷெராவத்

10 ஆக, 2015 - 11:49 IST
எழுத்தின் அளவு:
Mallika-Sherawat-in-Radhe-Maa-role

சர்ச்சைகளில் சிக்கி, அனைத்து ஊடகங்களிலும் தலைப்புச் செய்திகளாக வலம் வந்து கொண்டிருக்கும் பெண் சாமியார் ராதே மா, விரைவில் பாலிவுட்டிலும் சினிமா ஆக வர இருக்கிறார்.


மகாராஷ்டிராவைச் சேர்ந்த பெண் சாமியார் ராதே மாவுக்கு, 50; நாடு முழுவதும் தீவிர பக்தர்கள் உள்ளனர். 23ம் வயதில் சாமியார் ஆன இவர், பக்தர்களை கட்டிப்பிடித்து, முத்தம் தந்து ஆசி அளிப்பார். மறைந்த பிரமோத் மகாஜனின் மகன், ராகுல் மகாஜன், டுவிட்டர் பக்கத்தில், சமீபத்தில், ராதே மா புகைப்படங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். மினி ஸ்கர்ட் உடையில், சோபாவில், தொடைகள் தெரியும் படியும், தலையில் சிவப்புத் தொப்பி அணிந்து, சினிமா நடிகை போன்று ஸ்டைலாக நின்றபடியும், ராதே மா, போஸ் தந்திருந்தார். இந்நிலையில், ராதே மா மீது, மும்பையைச் சேர்ந்த, 32 வயது பெண் வழக்கறிஞர் பல்குனி பிரம்பட் காவல் நிலையத்தில், நேற்று, வரதட்சணை கொடுமை புகார் அளித்துள்ளார். பல்குனி பிரம்பட் அளித்த புகாரில் கூறப்பட்டு உள்ளதாவது:


மதத்தின் பெயரால், ராதே மா, அப்பாவி மக்களை ஏமாற்றுகிறார். அருவருக்கத்தக்க, ஆபாசங்களை அவர், பக்தர்களிடையே அரங்கேற்றி வருகிறார். அவரது பக்தர்களான, என் மாமனார், மாமியார் மூலம், என்னிடம் வரதட்சணை கேட்டு தொல்லை தரும்படி, ராதே மா தூண்டி விட்டுள்ளார். வரதட்சணை தராவிட்டால், அடித்து உதைக்குமாறும் கூறிஉள்ளார். ராதே மா, என்னை நேருக்கு நேர், கண்டபடி அசிங்கமாக திட்டியுள்ளார்.


ராதே மா தூண்டுதலால், மனதளவிலும், உடல் அளவிலும், தாங்க முடியாத அளவு துன்பம் அனுபவித்து வருகிறேன். இவ்வாறு, பல்குனி பிரம்பட் கூறியுள்ளார். இதையடுத்து, புகார் தந்த பெண்ணின் மாமனார், மாமியார், கணவர் உட்பட ஏழு பேருக்கு எதிராக, போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். ஏற்கனவே, அரை குறை ஆடையுடன், போஸ் தந்து, பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், ராதே மா மீது, வரதட்சணை கொடுமை புகார் வந்துள்ளது, பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


இந்நிலையில், ராதே மா குறித்த படம், பாலிவுட்டில் விரைவில் வெளியாக உள்ளது. ராதே மா கேரக்டரில், மல்லிகா ஷெராவத் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த படத்தை, ரஞ்ஜீத் சர்மா தயாரிப்பில், விக்கி ரனாவத் இயக்க உள்ளார். ராகுல் மகாஜன், டோலி பிந்தரா, பூனம் ஜான்வார் உள்ளிட்டோர் இப்படத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் க்ரிஷ்- 4 : பவர்புல் வில்லனாக மாறும் ஹிருத்திக் ரோஷன் க்ரிஷ்- 4 : பவர்புல் வில்லனாக மாறும் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)