Advertisement

சிறப்புச்செய்திகள்

புதிய கதைகளை தேடி செல்லும் சிம்பு! | பிரதீப் ரங்கநாதன், அஸ்வத் கூட்டணியில் உருவாகும் டிராகன் படம்! | மீண்டும் ஹிந்துவாக மாறிய இசையமைப்பாளர் ஜிப்ரான்! | 'மணிசித்திரதாழு' படத்தை 50 முறை பார்த்தேன்- போஸ்டருடன் செல்வராகவன் வெளியிட்ட பதிவு! | துருவ் விக்ரம் நடிக்கும் புதிய படத்தின் அப்டேட்டை வெளியிட்ட விக்ரம்! | கடற்கரையில் பிகினியில் நீராடும் கங்குவா நாயகி திஷா பதானி! | மீண்டும் இணைந்த விஜய் தேவரகொண்டா - தில் ராஜூ | தள்ளிப்போகும் இந்தியன் 2 ... அதே தேதியை குறிவைக்கும் ராயன்? | விஜய் 69வது படத்தை தயாரிக்கும் யஷ் பட தயாரிப்பாளர்? | ‛மஞ்சும்மல் பாய்ஸ்' படம் தந்த பாடம்: நடிகர் சித்தார்த் அருண்பாண்டியன் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

நான் கடவுளை விட விதியை நம்புபவன் : அக்ஷய் குமார்

26 ஏப், 2015 - 03:34 IST
எழுத்தின் அளவு:
I-believe-in-destiny-more-than-god--Akshay-Kumar

நான் கடவுளை விட விதியை நம்புபவன். ஏனெனில், நான் திறமையினால் வளரவில்லை, எனது விதியின் காரணமாகவே இந்த நிலைக்கு வந்துள்ளதாக பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் கூறியுள்ளார்.


பேபி படத்தின் வெற்றியை தொடர்ந்து, அக்ஷய் குமார், கப்பார் இஸ் பேக் படத்தில் நடித்துள்ளார். கப்பார் இஸ் பேக், இவ்வார இறுதியில் வெளியாக உள்ளது. படத்தில் தனது கேரக்டர் மற்றும் சூட்டிங்கின்போது ஏற்பட்ட அனுபவங்கள் குறித்து நம்முடன் அவர் பகிர்ந்துகொள்கிறார்.


கப்பார் இஸ் பேக் படத்தில் கப்பார் யார்?


ஷோலே படத்தின் வில்லன் பெயர் தான் கப்பார். அந்த பெயரையே, நான் இப்படத்தின் தலைப்பாக வைத்துள்ளேன். ஷோலே படத்தில் வில்லனின் கேரக்டர் பெயர் கப்பார். ஆனால், கப்பார் இஸ் பேக் படத்தில், ஹீரோவிற்கு பெயர் கப்பார். வில்லனின் திறன் கொண்ட இப்படத்தின் ஹீரோ, மக்களுக்கு தீங்கிழைக்காமல், சமூகத்தில் உள்ள ஊழலை ஒழிக்க பாடுபடுபவர். கப்பார், ஊழல் மட்டுமல்லாது, ஊழல்வாதிகளுக்கு எதிரானவன் ஆகும்.


கப்பார் இஸ் பேக், ரமணா படத்தின் ரீமேக்காமே? உண்மையாகவா?


ஆம். உண்மையாகத் தான். ரமணா படத்தின் ரீ்மேக் தான் இந்த கப்பார் இஸ் பேக் படம். சஞ்சய் லீலா பன்சாலி, ரமணா படத்தை பார்த்து, அந்த கதையை என்னிடம் கூறினார். உடனடியாக, இந்த படத்தை ரீமேக் செய்ய தீர்மானித்தோம். ஊழல் என்ற ஒன்று மட்டும், இப்படத்தில் ஒரேமாதிரியானது ஆகும். ரமணா படத்தில் சில மாற்றங்களை மேற்கொண்டு, இப்படத்தை உருவாக்கியுள்ளோம்....


படத்தின் பெயர் மாற்றியிருந்தீர்களே? ஏன்?


முதலில் இந்த படத்திற்கு மெய்ன் கப்பார் என்று தான் பெயர் வைத்திருந்தோம். பிறகே, கப்பார் இஸ் பேக் என்று மாற்றினோம். கப்பார் இஸ் பேக் பெயர் பார்ப்பதற்கு அழகாகவும், அதே சமயம் அனைத்து தரப்பினரையும் கவர்வதாக இருந்தது. அதனால் தான் அந்த பெயரையே வைத்துக்கொண்டோம்..


புதுமுக இயக்குநர் கிரிஷ் உடன் பணியாற்றிய அனுபவம்


கிரிஷ் புதுமுக இயக்குநர் தான். நான் அவருடன் இதற்குமுன் ஒரு படத்தில் இணைந்து பணியாற்றியுள்ளேன். அவர் தேசிய விருது வாங்கிய இயக்குநர். நல்ல திறமையானவர். கொஞ்சம் அதிகமாக வெட்கப்படுவார், மிகவும் எளிமையானவர். அவருடைய வொர்க்கிங் ஸ்டைலே அற்புதமாக இருக்கும். அவருடைய பணியை, நீங்கள் தான் விரைவில் பார்க்க இருக்கிறீர்கள்..




இந்த படத்திற்காக உடல் எடையை அதிகரித்தீர்களாமே?


ஆம். 15 கிலோ வரை உடல் எடையை அதிகரித்தேன். கேரக்டருக்கு தேவை என்பதால், உடல் எடையை அதிகரித்துக்கொண்டேன். படத்தின் சூட்டிங் முடிந்தவுடனேயே, உடனடியாக 15 கிலோ குறைத்தேன். விரைவில் பிரதர்ஸ் படத்தின் படப்பிடிப்பு துவங்க உள்ளது.




புதுமுகங்களுக்கு தொடர்ந்து வரவேற்கிறீர்களே ? ஏன்?


புதுமுகங்களுடன் பணியாற்றுவதால், அவர்களிடமிருந்து புதுப்புது விஷயங்களை கற்றுக்கொள்கிறேன். புதுப்புது சிந்தனைகள் உருவாகின்றன. மோதல் போக்கு ஏற்படுவதற்கு வாய்ப்பு இல்லாமல் போய்விடுகிறது. திறமை உள்ளவர்களுக்கு எப்போதும் எங்கேயும் வாய்ப்பு என்பது காத்திருக்கும்.


எந்தவிதமான ரோல்களில் நடிக்க ஆசை?


ஆக்ஷன், காமெடி, ரொமான்டிக் என எல்லாவித ரோல்களிலும் நடித்துவிட்டேன். பகவான் கிருஷ்ணர் ரோலில் கூட நடித்துவிட்டேன். சிவபெருமான் கேரக்டரில் நடிக்க வேண்டும் என்பது எனது ஆசை. ஏனெனில் நான் தீவிர சிவபக்தன்.


கடவுள் நம்பிக்கை உண்டா?


எனக்கு சிறுவயதில் இருந்தே, கடவுள் நம்பிக்கை அதிகமாக உண்டு. ஆனால், நான் கடவுளை விட விதியை அதிகமாக நம்புபவன். ஏனெனில், இந்த உலகத்தில், திறமையானவர்களை விட, விதிவசத்தால், முன்னணி இடத்திற்கு வந்தவர்களே அதிகம். சினிமா துறைக்கும் இது பொருந்தும் என்று அக்ஷய் குமார் கூறினார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் க்ரிஷ்- 4 : பவர்புல் வில்லனாக மாறும் ஹிருத்திக் ரோஷன் க்ரிஷ்- 4 : பவர்புல் வில்லனாக மாறும் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)