சூர்யா 46 படத்தில் இணைந்த பாலிவுட் நடிகர்! | அட்லி, அல்லு அர்ஜுன் படத்தில் இணைந்த ரம்யா கிருஷ்ணன்! | மகன் இயக்கியுள்ள படம் குறித்து ஷாருக்கானின் நேர்மையான விமர்சனம் | நடிகர் சங்கத்தில் மீண்டும் சேருவேனா ? நடிகை பாவனா பதில் | டாம் குரூஸ் படத்தில் நடிக்க மறுத்தது ஏன் ? பஹத் பாசில் விளக்கம் | ரஜினியின் ‛கூலி' படத்தின் மூன்றாவது நாள் வசூல் எவ்வளவு? | ஸ்ரீ லீலாவை ஆலியா பட்டுக்கு போட்டியாக சித்தரிக்கும் பாலிவுட் ஊடகங்கள்! | பலாத்காரம் செய்யப்பட்டாலும் பெண்களைத்தான் குறை சொல்கிறார்கள்! -கங்கனா ரணாவத் ஆவேசம் | தனுஷின் ‛இட்லி கடை'யில் கெஸ்ட் ரோலில் நடித்துள்ள ஷாலினி பாண்டே! | 58 வயதிலும் தீவிர ஒர்க்அவுட்டில் ஈடுபடும் நதியா! |
பாலிவுட்டின் முன்னணி நடிகரான ஹிருத்திக் ரோஷன், அவரது மனைவி சுசானே கடந்த டிசம்பர் மாதம் பிரிந்து விட்டார்கள். அது முதலே அவர்களைப் பற்றிய செய்திகளை மும்பை மீடியாக்கள் வெளியிட்டு வருகின்றன. சில நாட்களுக்கு முன் ஹிருத்திக்கின் மனைவி சுசானே, அவரது முன்னாள் கணவரான ஹருத்திக்கிடம் இருந்து 400 கோடி ரூபாய் ஜீவனாம்சம் கேட்பதாக செய்திகள் வெளியாகின. அதைத் தொடர்ந்து கணவரது குடும்பப் பெயரையும் அவர் நீக்க முடிவெடுத்திருப்பதாகவும் செய்திகளை வெளியிட்டார்கள். இது பற்றிய செய்திகளுக்கு பல பாலிவுட் பிரபலங்களே அவர்களது சமூக வலைத்தளங்களில் கண்டனம் தெரிவித்தனர். அவரவர்க்கென்று குடும்பம் இருக்கிறது, அதைப் பற்றியெல்லாம் தற்போது தாறுமாறாக எழுதி வருகிறார்கள் என்றெல்லாம் கருத்துக்களைப் பதிவு செய்தார்கள்.
இதனிடையே இந்த செய்திகளைப் பற்றி ஹிருத்திக் ரோஷனும் அவருடைய கண்டனத்தைப் பதிவு செய்திருக்கிறார். “அனைத்தும் ஜோடிக்கப்பட்ட செய்திகள், என் அன்புக்குரியவர்களை இழிவு படுத்துகிறார்கள், என் பொறுமையையும் சோதிக்கிறார்கள்,” என கோபத்துடன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர்களது குடும்பத்துக்கு நெருக்கமான ஒருவர் கூறுகையில், “ஹிருத்திக் - சுசானே இடையே பணமோ, சொத்தோ ஒரு பிரச்னையே அல்ல. இதை அவர்கள் நீதிமன்ற வழிகாட்டுதலுக்கே விட்டுவிட்டார்கள். ஹிருத்திக்கைப் பொறுத்தவரை அவரது குடும்பத்தினர் நன்றாக இருக்க வேண்டும். சுசானேவும் சுதந்திரமான ஒரு பெண், அவரும் ஏற்கெனவே சொந்தமாக பிசினஸ் செய்து வருகிறார். அவர்களுக்குள் பணத்தால் ஒரு பிரச்னை என்பது ஜோடிக்கப்பட்ட, மோசமான ஒன்று, ” என்கிறார்.