Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

ரிலீஸுக்கு முன்பே 200 கோடி அள்ளிய ஷாரூக் படம்...!

28 ஜூலை, 2014 - 05:13 IST
எழுத்தின் அளவு:

ஃபரா கான் இயக்கத்தில் ஷாரூக் கான், அபிஷேக் பச்சன், தீபிகா படுகோனே, சாரா ஜேன் டயஸ், ஜாக்கி ஷெராப் மற்றும் பலர் நடிக்க பிரம்மாண்டமாக உருவாகி வரும ஹிந்திப் படம் 'ஹேப்பி நியு இயர்'. 2007ம் ஆண்டு வெளிவந்த 'ஓம் சாந்தி ஓம்' படத்திற்குப் பிறகு ஃபரா கான், ஷாரூக் கான், தீபிகா படுகோனே கூட்டணி மீண்டும் இணையும் படம். 'சென்னை எக்ஸ்பிரஸ்' படத்தின் வெற்றிக்குப் பிறகு ஷாரூக் கான், தீபிகா படுகோனே மீண்டும் ஜோடி சேர்ந்துள்ள படம்.


ரிலீஸுக்கு முன்பே மிகப் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது இந்தப் படம். உலகம் முழுவதும் இப்படத்தை திரையரங்குகளில் வெளியிடும் உரிமை சுமார் 125 கோடிக்கு விற்கப்பட்டுள்ளதாம். படத்தின் ஆடியோ உரிமை சுமார் 12 கோடிக்கும், தொலைக்காட்சி உரிமை சுமார் 65 கோடிக்கும் விற்கப்பட்டுள்ளதாம். வெளியீட்டிற்கு முன்பே படத்தின் வியாபாரம் இந்த அளவுக்கு நடைபெற்றதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை என பாலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 'ஓம் சாந்தி ஓம்' வெற்றிக் கூட்டணி மீண்டும் இணைவதாலும், ஷாரூக் - தீபிகா ஜோடி திரையில் மிகவும் பொருத்தமாக இருப்பதாலும் இந்தப் படமும் உலக அளவில் சாதனை புரிய வாய்ப்புள்ளது என்கிறார்கள்.


வரும் ஆகஸ்ட் 15 அன்று இப்படத்தின் டிரைலர் வெளியாக உள்ளது. இந்த வருட தீபாவளிக்கு படத்தை வெளியிட இருக்கிறார்கள். தமிழ், தெலுங்கிலும் இப்படம் 'டப்' செய்யப்பட்டு வெளியாக உள்ளது.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் க்ரிஷ்- 4 : பவர்புல் வில்லனாக மாறும் ஹிருத்திக் ரோஷன் க்ரிஷ்- 4 : பவர்புல் வில்லனாக மாறும் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)