கோவாவில் செட்டில் ஆகிறாரா ரவிமோகன் | 'எல்ஐகே' படத்தால் மாறிய 'காளிதாஸ் 2, லீடர்' வெளியீடுகள் | தாய்லாந்து தீவில் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா ஹனிமூன் | பிரசாந்த் நடிக்க வேண்டிய 'பூவே உனக்காக' : தேடிப் போன விஜய் அப்பா…! | 'பெத்தி' படப்பிடிப்பில் ராம்சரணுக்கு கண்ணில் காயம் பட்டதா ? படக்குழுவினர் விளக்கம் | அஜித் 64 அறிவிப்புக்காக காத்திருக்கும் ரசிகர்கள் | 26வது பிறந்தநாளை தந்தையுடன் கொண்டாடிய திலீப் மகள் ; தாயுடன் பத்து வருடமாக பாராமுகம் | போலி 'ஏஐ' வீடியோக்கள் : 'துரந்தர்' இயக்குனர் ஆதித்ய தர் எச்சரிக்கை | இனி இந்த ஜானரில் படங்களை இயக்கப் போவதில்லை ; இயக்குனர் பிரியதர்ஷன் முடிவு | உஸ்தாத் பகத்சிங் : ரூ.100 கோடி மேல் நஷ்டம் வருமா? |

ரன்வீர் சிங், அர்ஜுன் ராம்பால், சஞ்சய் தத், மாதவன், சாரா அர்ஜுன் மற்றும் பலர் நடிப்பில், ஆதித்ய தர் இயக்கத்தில் மார்ச் 19ம் தேதி வெளியாக உள்ள பான் இந்தியா திரைப்படம் 'துரந்தர் - தி ரிவெஞ்ச்'.
ஹிந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் மார்ச் 7ல் வெளியான இப்படத்தின் டிரைலர் யு டியூப், இன்ஸ்டாகிராம், பேஸ்புக், எக்ஸ் ஆகிய தளங்களில் 300 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளதாக தயாரிப்பு நிறுவன அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
யு டியூப் தளத்தில் 45க்கும் மேற்பட்ட நாடுகளில் இந்த டிரைலர் டிரெண்டிங்கில் உள்ளது. டிரைலருக்குக் கிடைத்துள்ள வரவேற்பு படத்தின் முன்பதிவையும் அதிகரிக்க வைத்துள்ளது. ஆன்லைன் இணையதளங்களில் இப்படத்திற்கான முன்பதிவும் அதிகரித்து வருகிறது.
'துரந்தர்' படத்தின் முதல் பாகம் கடந்த வருடம் டிசம்பர் மாதம் வெளியாகி சுமார் 1400 கோடி வசூலித்தது. இரண்டாம் பாகமும் 1000 கோடி வசூலைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முதல் பாகத்தின் வசூலைக் கடக்குமா என்பது படம் வெளிவந்த பிறகே தெரியும்.