ஜி.டி. நாயுடு படத்தில் இணைந்த பிரபலங்கள் | 'மதராஸி' என்று டைட்டில் வைத்தது ஏன்? - ஏ.ஆர். முருகதாஸ் தகவல் | ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் படத்தில் கமிட்டான சிவகார்த்திகேயன்! | அறுவை சிகிச்சை குறித்து ஸ்ருதிஹாசனின் பதில்! | கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் விஜய் சேதுபதி? | முதல் முறையாக தனுஷ் படத்தில் இணைகிறாரா அர்ஜூன்? | 'பைசன்' படப்பிடிப்பு நிறைவு | ராதிகா ஆப்தே செய்தது சரியா? | ஏப்ரல் வரை தமிழ் சினிமா காத்திருக்க வேண்டுமா? | பிளாஷ்பேக்: முதல் சினிமாஸ்கோப் திரைப்படமாக தமிழ் திரையை அலங்கரித்த “ராஜ ராஜ சோழன்” |
நடிகர் பிரித்விராஜ் கடந்த 2019ல் மோகன்லால் நடிப்பில் லூசிபர் என்கிற வெற்றிப்படத்தை இயக்கி இயக்குனராக அறிமுகமானார். அந்தப்படம் வெளியாகி ஐந்து வருடம் கழிந்த நிலையில் அதன் இரண்டாம் பாகம் எம்புரான் என்கிற பெயரில் வரும் மார்ச் 27ம் தேதி வெளியாக இருக்கிறது. இந்த படத்தில் பெரிதும் சிறிதுமாக கிட்டத்தட்ட முக்கியத்துவம் வாய்ந்த 40 கதாபாத்திரங்கள் இடம்பெற்றுள்ளன. படம் வெளியாக இன்னும் ஒரு மாதத்திற்கு மேல் இருக்கும் நிலையில் ஒவ்வொரு கதாபாத்திரங்களையும் படக்குழுவினர் அறிமுகம் செய்து வருகின்றனர். அந்த வகையில் இந்த படத்தின் சுரையா பீபி என்கிற வயதான கதாபாத்திரத்தில் நடித்துள்ள பாலிவுட் நடிகை நயன் பட்டின் கதாபாத்திர தோற்றத்தை தற்போது வெளியிட்டுள்ளனர்.
படத்தை இயக்கியுள்ளதுடன் முதல் பாகத்தில் தான் நடித்த சையத் மசூத் என்கிற முக்கிய கதாபாத்திரத்தில் இதிலும் தொடர்கிறார் பிரித்விராஜ். .அவரது தாயார் சுரையா பீபியாக நடித்திருக்கிறார் நயன் பட். இவர் மலையாளத்தில் முதன்முறையாக நடிக்கும் படம் இது. பல வருட அரசியல் அனுபவங்களை கொண்ட, வாழ்க்கையில் பல கஷ்டங்களை தைரியமாக எதிர்கொண்ட பெண்ணாக இவரது கதாபாத்திரம் உருவாக்கப்பட்டுள்ளது.
“அந்த அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரம் என்பதால் எனது வயதான தோற்றத்திற்காக தினசரி கிட்டத்தட்ட 3 மணி நேரம் மேக்கப் மட்டுமே செய்யப்பட்டது என்று கூறியுள்ளார் நயன் பட். எத்தனையோ இயக்குனர்களின் படங்களில் கடந்த 35 வருடங்களுக்கு மேல் நடித்துள்ளேன். ஆனால் ஒரு இயக்குனராகவும் சக நடிகராகவும் பிரித்விராஜ் ரொம்பவே தனித்தன்மை வாய்ந்தவராக எனக்கு தெரிந்தார்” என கூறியுள்ளார் நயன் பட்.