இட்லி கடை படத்தை பார்த்த ஜி.வி.பிரகாஷ் | டாப் 5 பட்டியலில் இடம் பிடிக்கும் சிவகார்த்திகேயன் | ‛தக் லைப்' பட அப்டேட் தந்த த்ரிஷா | ‛பென்ஸ்' படத்திற்கு இசையமைக்கும் இளம் பாடகர் | 4 நாட்களில் ரூ.50 கோடி கிளப்பில் லக்கி பாஸ்கர் | மிக அழகாக நடித்த மீனாட்சி சவுத்ரி! துல்கர் சல்மான் வெளியிட்ட தகவல் | பாலிவுட் என்ட்ரி குறித்து சூர்யா சொன்ன பதில்! | கங்குவா, விடுதலை 2 - எஞ்சிய இரண்டு மாதங்களுக்கு இரண்டே பெரிய படங்கள்தான்? | பிளாஷ்பேக்: மகேந்திரன் படத்தில் நடிக்க மறுத்த ரஜினி | கன்னட இயக்குனர் குரு பிரசாத் தற்கொலை |
பாலிவுட்டில் அடுத்ததாக மிகப்பெரிய அளவில் எதிர்பார்க்கப்படும் படங்கள் ரோஹித் ஷெட்டி இயக்கத்தில் அஜய் தேவ்கன், அக்ஷய் குமார் உள்ளிட்டோர் நடித்துள்ள சிங்கம் அகைன் மற்றும் ஏற்கனவே இரண்டு பாகங்கள் வெற்றி பெற்ற நிலையில் கார்த்திக் ஆர்யன், வித்யா பாலன், மாதுரி தீட்சித் ஆகியோர் நடிப்பில் மூன்றாவது பாகமாக வெளியாகும் பூல் புலையா-3 ஆகியவை தான். இந்த இரண்டு படங்களும் இன்று நவம்பர் 1ம் தேதி வெளியாக இருக்கின்றன. அதேசமயம் இந்த இரண்டு படங்களும் அரபு நாடுகளின் வெளியிட தடை விதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதில் சிங்கம் அகைன் திரைப்படம் ராமாயணம் சம்பந்தப்பட்ட சில நிகழ்வுகளையும், இஸ்லாமிய மதம் குறித்த சில சர்ச்சை கருத்துக்களையும் கூறியிருப்பதாக கருதி அந்த படத்தை வெளியிட தடை விதித்திருப்பதாக சொல்லப்படுகிறது. அதேபோல பூல் புலையா-3 திரைப்படம் அரபு நாடுகளில் மிகவும் எதிர்க்கப்படுகின்ற, தடை செய்யப்பட்ட ஓரினச்சேர்க்கை விவகாரத்தை உள்ளடக்கியதாக இருப்பதால் அந்த படமும் அரபு மற்றும் வளைகுடா நாடுகளில் வெளியாக தடை விதிக்கப்பட்டுள்ளது என்றும் சொல்லப்படுகிறது.
இதைத் தாண்டி தங்கள் படங்களில் இந்த விஷயங்களை சரி செய்து அரபு நாடுகளில் இந்த படத்தை வெளியிடும் முயற்சிகளை மேற்கண்ட படக்குழுவினர் மேற்கொண்டுள்ளார்களா என்பது பற்றி தகவல் எதுவும் வெளியாகவில்லை.