'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
மலையாள திரையுலகில் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் ரோஷன் ஆண்ட்ரூஸ். மும்பை போலீஸ், காயங்குளம் கொச்சுன்னி, சல்யூட் உள்ளிட்ட பல ஹிட் படங்களை இயக்கிய இவர், மலையாளத்தில் மஞ்சு வாரியருக்கு ரீ என்ட்ரி கொடுத்த ஹவ் ஓல்ட் ஆர் யூ மற்றும் தமிழில் ஜோதிகாவுக்கு ரீ என்ட்ரி கொடுத்த 36 வயதினிலே ஆகிய படங்களையும் இயக்கியவர். ஆனால் கடந்த சில வருடங்களாக இவர் மலையாளத்தில் இயக்கிய படங்கள் சரியாக போகவில்லை.
இந்த நிலையில் தற்போது பாலிவுட்டில் அடி எடுத்து வைத்துள்ள ரோஷன் ஆண்ட்ரூஸ், நடிகர் சாஹித் கபூர் கதாநாயகனாக நடிக்கும் ‛தேவா' படத்தை இயக்கி வந்தார். இந்த படத்தில் கதாநாயகியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக நடைபெற்று வந்த இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது நிறைவடைந்துள்ளது. இது குறித்து வீடியோ ஒன்றை தனது சோசியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்து கொண்டுள்ள ரோஷன் ஆண்ட்ரூஸ், என்னையும் என்னுடைய கதையையும் புரிந்து கொண்டு எனக்கு மிகப்பெரிய ஒத்துழைப்பு அளித்த தயாரிப்பாளர் சித்தார்த் ராய் கபூருக்கு எனது நன்றி என்று கூறியுள்ளார்.