பார்த்திபன் இயக்கும் படத்தில் ‛லப்பர் பந்து' ஹீரோயின் | காஞ்சனா 4 படத்தில் ராஷ்மிகா மந்தனா? | ரஜினி - கமலை இணைத்து படம் இயக்க ஆசைப்படும் கே.எஸ்.ரவிக்குமார் | என்னை பிரபலப்படுத்தாதீங்க... : அஜித் பேச்சு | சினிமாவில் பாலகிருஷ்ணா 50 : வாழ்த்திய ரஜினி | சமோசா மீது எனக்கு தனி லவ் : தமன்னா | ஜெயிலர் 2 பற்றி ஓவராக பேசி ஹைப் ஏற்ற விரும்பவில்லை : நெல்சன் | மாதம்பட்டி ரங்கராஜ் கொஞ்சி பேசும் வீடியோவை வெளியிட்ட ஜாய் கிரிசில்டா | அஜித் 64வது படம் தாமதமாகிறது...? | முதல் குழந்தை வீட்டிற்கு வருவதற்கு முன் ஆறு குழந்தைகளை பறிகொடுத்தேன் : சன்னி லியோன் |
பாலிவுட்டின் முன்னணி நடிகைகளில் ஒருவர் ஆலியா பட். 'ஆர்ஆர்ஆர்' படத்தில் கதாநாயகியாக நடித்ததால் தென்னிந்திய சினிமா ரசிகர்களுக்கும் அறிமுகமானவர்.
சமீபத்தில் லண்டனில் நடைபெற்ற 'ஹோப் காலா' என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தொகுத்து வழங்கியுள்ளார். அப்போது அவரது கழுத்தில் அணிந்திருந்த நெக்லஸ் விலை 20 கோடி மதிப்புள்ளது என சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகிறார்கள்.
நீல நிற சபையர் கல், வைரம் பதித்த அந்த நெக்லஸ் ஆலியாவின் அழகான கழுத்தை அலங்கரித்துள்ளது. சில லட்சங்களில் ஆடைகள், ஹேண்ட் பேக்குகள், ஷுக்கள் என கடந்து தற்போது அலங்காரத்திற்காகவும், பேஷனுக்காகவும் கோடிகளை, அதுவும் 20 கோடிகள் வரையில் அணிவது பேஷனாகிவிட்டது.
இந்தியாவில் உள்ள ஆதரவற்ற இளம் வயதினருக்காக நிதி திரட்டும் நிகழ்ச்சியில்தான் ஆலியா அத்தனை கோடி நெக்லஸ் அணிந்து விழாவைத் தொகுத்து வழங்கியுள்ளார்.