என் கருத்துக்களை திட்டமிட்டே சர்ச்சை ஆக்குகிறார்கள் : ராஷ்மிகா ஆதங்கம் | பிளாஷ்பேக்: சிந்தைக்கும், செவிக்கும் விருந்தளித்த ஸ்ரீதரின் “சிவந்த மண்” | தனுஷை தொடர்ந்து நானியை இயக்கும் சேகர் கம்முலா | கூலி படம் இன்னொரு தளபதி : லோகேஷை கட்டிப்பிடித்து பாராட்டிய ரஜினி | சிவராஜ்குமாரை இயக்கும் தமிழ் இயக்குனர் | சாம் ஆண்டன் இயக்கத்தில் பிரபுதேவா, வடிவேலு | பவித்ராவுக்கு என்னாச்சு?: அவரே வெளியிட்ட விளக்கம் | மீண்டும் இணைந்த பிளாக் பட கூட்டணி! | இளையராஜா பாடலை பயன்படுத்த, வனிதாவுக்கு தடைவிதிக்க கோர்ட் மறுப்பு | விடைபெற்றார் நடிகை சரோஜாதேவி : சொந்த ஊரில் அரசு மரியாதையுடன் உடல் நல்லடக்கம் |
அர்ஜுன் ரெட்டி படம் மூலம் பிரபலமான இயக்குனர் சந்தீப் ரெட்டி வங்கா. அதன் பிறகு அந்த படத்தின் ரீமேக்கான கபீர் சிங் மூலமாக பாலிவுட்டில் அடி எடுத்து வைத்தார். அங்கே வெற்றி பெற்றதும் ரன்பீர் கபூரை வைத்து அனிமல் படத்தை இயக்கும் வாய்ப்பு வந்தது. கச்சிதமாக அந்த வாய்ப்பை பயன்படுத்தி அந்த படத்தை வெற்றிப் படமாக்கியதுடன் ஆயிரம் கோடி வசூல் கிளப்பிலும் அதை இணைத்தார் சந்தீப் ரெட்டி வங்கா. அந்த படம் வெளியான நாளிலிருந்து பலவிதமான சர்ச்சைகளையும் விமர்சனங்களையும் சந்தித்தாலும் கூட அதன் வெற்றியையும் வசூலையும் எதுவும் பாதிக்கவில்லை.
இந்த படத்தை தொடர்ந்து அடுத்ததாக பிரபாஸ் நடிக்க இருக்கும் ஸ்பிரிட் படத்தை இயக்குகிறார் சந்தீப். இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் டிசம்பர் மாதம் துவங்க இருக்கிறது என்று சொல்லப்படுகிறது. இதனை முடித்துவிட்டு அல்லு அர்ஜுன் படத்தை இயக்குவார் என்றும் ஒரு செய்தி சோசியல் மீடியாவில் அவ்வப்போது வெளியாகி வருகிறது.
ஆனால் பிரபாஸ் படத்தை முடித்ததும் அனிமல் படத்தின் இரண்டாம் பாகமாக தான் மனதில் ஏற்கனவே உருவாக்கி வைத்துள்ள 'அனிமல் பார்க்' படத்தை தான் சந்தீப் ரெட்டி வங்கா இயக்க இருக்கிறாராம். ரன்பீர் கபூர் கதாநாயகனாக நடிக்கும் இந்த படத்தில் முதல் பாகத்தில் இடம்பெற்ற பல முக்கிய கதாபாத்திரங்களும் இடம்பெற இருக்கிறார்கள் என்றும் சொல்லப்படுகிறது.