அப்பாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து சொன்ன விஷால் | பிரதீப் ரங்கநாதன் , அட்லி புதிய கூட்டணி! | '7ஜி ரெயின்போ காலனி 2' படத்தில் கேமியோ ரோலில் சோனியா அகர்வால் | 'வாரணாசி' படத்திற்காக அமெரிக்கா பறந்த ராஜமவுலி! | முறுக்கு மீசை, நீளமான முடி புதிய தோற்றத்தில் அருண் விஜய்! | 'ஜெயிலர் 2' படத்தில் எந்தவொரு பாலிவுட் நடிகரும் இல்லை! | முதல்முறையாக போலீஸ் அதிகாரியாக நடிக்கும் சாய் பல்லவி! | 'யாமிருக்க பயமே' இயக்குனருடன் கைகோர்க்கும் நித்யா மேனன்! | 'அபூர்வ சகோதரர்கள்' படத்தில் நாங்கள் எடுத்த ரிஸ்க்: கமல்ஹாசன் | மே மாதப் படங்கள்: 2026ன் முதல் வசூல் வெற்றி |

பாலிவுட் கவர்ச்சி நடிகை பூனம் பாண்டே. விளம்பர பரபரப்புக்காக அவ்வப்போது எதையாவது செய்வார். கடந்த சில நாட்களுக்கு முன்பு அவர் செய்தது எல்லை மீறி தற்போது அவரை சிக்கலில் மாட்டி உள்ளது. கர்ப்பப்பை புற்றுநோய் பாதிப்பில் இறந்துவிட்டதாக பொய்யான தகவலை சமூக வலைத்தளத்தில் பரப்பி இறப்பு நாடகம் ஆடினார். விழிப்புணர்வுக்காகவே இப்படி செய்தேன் என்றார்.
இந்த நிலையில் மராட்டிய சட்டசபை மேலவை உறுப்பினர் சத்யஜீத் தாம்பே, பூனம் பாண்டே குறித்து போலீசில் புகார் அளித்துள்ளார். கோல்கட்டாவை சேர்ந்த அமித் ராய் என்பவர் பூனம் பாண்டேவுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பி உள்ளார். “பொதுமக்கள் இடையே தேவையற்ற பீதியையும், மன உளைச்சலையும், குழப்பத்தையும் ஏற்படுத்தி இருப்பதால் உங்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க இருக்கிறோம்” என்று அந்த நோட்டீஸில் குறிப்பிட்டுள்ளார்.
பூனம் பாண்டே மீது வழக்கு தொடர்ந்தால் அவருக்கு சிறை தண்டனை கிடைக்கும் என்று சட்ட நிபுணர்கள் தெரிவித்து உள்ளனர்.