அண்ணாமலைக்கு பிடித்த ‛இட்லி கடை' | 'மகுடம்' படத்தை இயக்கும் விஷால்: வைரலாகும் புகைப்படங்கள் | 'மகாபாரதம்' தொடரில் கர்ணனாக நடித்த நடிகர் பங்கஜ் தீர் காலமானார் | மாதவனுடன் மோதும் நிமிஷா | கெனிஷாவின் இசை ஆல்பத்திற்காக பாடலாசிரியர் ஆனார் ரவி மோகன் | பிளாஷ்பேக் : பரப்பன அக்ரஹார சிறையில் தமிழ் படம் | பிளாஷ்பேக் : 'ராஷோமோன்' பாதிப்பில் உருவான 'அந்த நாள்' | கார் ரேஸில் தொடர்ந்து பயணிக்க அஜித் முடிவு | காமெடி நடிகை ஆர்த்தி தந்தை காலமானார் | நீ தனியாக ஜெயித்து காட்டு: மகனை தனித்துவிட்ட விக்ரம் |
பதான் என்கிற மிகப்பெரிய வெற்றி படத்தை தொடர்ந்து நடிகர் ஷாரூக்கான் நடிப்பில் அடுத்ததாக வெளியாக இருக்கும் படம் ஜவான். தமிழில் தொடர்ந்து விஜய் படங்களை இயக்கி வந்த இயக்குனர் அட்லீ இந்த படத்தை இயக்குவதன் மூலம் பாலிவுட்டில் அடியெடுத்து வைத்துள்ளார். அதுமட்டுமல்ல இந்த படத்தின் கதாநாயகியாக நடித்துள்ளதன் மூலம் நடிகை நயன்தாராவும் முதல்முறையாக ஹிந்திக்குச் சென்றுள்ளார். விஜய் சேதுபதி வில்லனாக நடிக்க, யோகிபாபு முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். அனிருத் இசையமைத்துள்ளார்.
வரும் செப்டம்பர் 5ம் தேதி இந்த படம் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தில் இருந்து பாடல்கள், டீசர் என தொடர்ந்து வெளியாகி வருகின்றன. இந்த நிலையில் சோசியல் மீடியாவில் ஜவான் படத்தின் சில வீடியோ கிளிப்புகள் வெளியாகி படக்குழுவிற்கு மிகப்பெரிய அதிர்ச்சியை தந்துள்ளது. இதனை தொடர்ந்து படத்தின் தயாரிப்பாளரான ஷாரூக்கானின் ரெட் சில்லீஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் மும்பை சாண்டா குரூஸ் காவல் நிலையத்தில் இதுகுறித்து புகார் அளித்தது. இதனைத் தொடர்ந்து புகாரை பதிவு செய்து எப்ஐஆர் போடப்பட்டுள்ள நிலையில் மும்பை போலீசார் இது குறித்து விசாரித்து வருகின்றனர்.