இப்ப, தமிழ் சினிமாவில் டாப் 5 ஹீரோயின் யார் தெரியுமா? | சூர்யாவின் ‛கருப்பு' ரிலீஸ் எப்போது? | ராஷ்மிகாவின் ‛மைசா' படத்தில் இணையும் புஷ்பா 2 வில்லன் | பராசக்தி படப்பிடிப்பு முடிவடைந்தது | நவம்பர் 21-ல் ரீரிலீஸ் ஆகும் ப்ரண்ட்ஸ் | லாபத்தில் முதலில் நுழைந்த 'பைசன்' | தீபாவளிக்கு ஜனநாயகன் அப்டேட் ஏனில்லை | பொங்கலுக்கு நடிகர் சங்க கட்டடம் திறப்பு : விஷால் திருமணம் எப்போது | பிக்பாஸில் வந்து விட்டால் மட்டும் நடிகையாகி விட முடியாது: தர்ஷிகா | ஹீரோயின் ஆனார் 'அரண்மனை' ஹர்ஷா |
இந்து மற்றும் இஸ்லாமிய கூட்டு சமூகத்தை சேர்ந்தவர் ஹிந்தி நடிகை சாரா அலிகான். தாத்தா மன்சூர் அலிகான் பட்டோடி பாட்டி - ஷர்மிளா தாகூர், தந்தை சைப்அலி கான் தாய் அமிர்தா சிங். சாரா அலிகான் இந்து கலாச்சாரத்தை ஏற்றுக் கொண்டு வாழ்ந்து வருகிறவர். தற்போது அவர் அமர்நாத் பனிலிங்க தரிசனத்துக்காக அந்த யாத்திரையில் தன்னை இணைத்துக் கொண்டு அந்த பயணத்தை வெற்றிகரகமாக முடித்துள்ளார். பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் அங்கே சென்றவர், யாத்திரை முடிந்து திரும்புகையில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. சாராவுக்கு வாழ்த்துகளும் குவிந்து வருகிறது. சில நாட்களுக்கு முன்பு நடிகை சாய் பல்லவி அமர்நாத் யாத்திரை மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.