காதல், நகைச்சுவை கதைகளில் நடிக்க ஆர்வமாக இருக்கும் ருக்மணி வசந்த் | விண்வெளியில் நான்காவது திருமணம் செய்கிறாரா ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸ் | அஜித் 64வது படத்தின் அறிவிப்பு எப்போது? : ஆதிக் ரவிச்சந்திரன் தகவல் | ஓடிடிக்கு வருகிறது லோகா சாப்டர் 1 | டியூட் படத்தில் பிரதீப் பாடிய ‛சிங்காரி' பாடல் வெளியானது | தனுஷ் படத்தின் நாயகி யார்... நீடிக்கும் குழப்பம்? | ஜீவா, ராஜேஷ் படத்தில் இணையும் ரம்யா ரங்கநாதன் | ‛பேராண்டி' படத்தில் மனோரமா பாடிய கடைசி பாடல் | 'பைசன்' என் முதல் படம் மாதிரி: துருவ் விக்ரம் | தீபாவளி ரேசில் இன்னொரு படம் : ஆனாலும், ரசிகர்கள் பாடு திண்டாட்டம் |
வருகிற 26ம் தேதி வெளிவர இருக்கும் ஹாலிவுட் அனிமேஷன் படம் 'லிட்டில் மெர்மைட்'. ரோப் மார்ஷல் இயக்கி உள்ள இந்த படம் கடல் ராணி பற்றிய கதை. கடல் ராணி ஏரியல் வேடத்தில் ஹாலே பெய்லி நடித்துள்ளார். உர்சுலாவாக மெலிசா மெக்கார்த்தி, இளவரசர் எரிக்காக ஜோனா ஹவுர்-கிங், கிங் ட்ரைட்டனாக ஜேவியர் பார்டெம், செபாஸ்டியனாக டேவிட் டிக்ஸ், ப்ளோண்டராக ஜேக்கப் ட்ரெம்ப்ளே, ஸ்கட்டிளாக அவ்குவாஃபினா, நோமாவாக டுமேஸ்வேனி மற்றும் ஜூட் அகுவுடிகே ஆகியோர் நடித்துள்ளனர். வால்ட் டிஷ்னி தயாரித்துள்ள இந்த படத்திற்கு குழந்தைகள் மத்தியில் பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. இந்தியாவில் கோடை விடுமுறையை கருத்தில் கொண்டு வெளியிடுகிறார்கள். இந்த படத்தின் புரமோசன் விளம்பரத்தில் ஜான்வி கபூர் நடித்துள்ளார். குழந்தைகளுக்கு கடல் ராணியின் கதையை சொல்லும் அவர் இறுதியில் கடல் ராணியாக மாறுவது போன்று அந்த விளம்பரம் இடம் பெற்றுள்ளது. படத்திற்கு கிடைக்கும் வரவேற்பை பொறுத்து மற்ற மொழிகளில் வெளியிட திட்டமிட்டிருக்கிறார்கள்.