‛‛நாங்கள் பரம எதிரிகள் கிடையாது. ஆனால்...'': தனுஷ் பற்றி மனம்திறந்த நயன்தாரா | 5 மொழிகளில் வெளியாகும் அய்யப்பன் படம் | பிளாஷ்பேக் : மோகனை முழுமையான ஹீரோவாக்கிய 'கிளிஞ்சல்கள்' | சீரியல் நடிகை கீதாஞ்சலிக்கு ஆண் குழந்தை! குவியும் வாழ்த்துகள் | புஷ்பா 2 - தமிழகத்தில் 50 கோடி வசூல் | தன் மீதான வழக்கை ரத்து செய்ய அல்லு அர்ஜுன் மனு | பிளாஷ்பேக் : அன்புள்ள ரஜினிகாந்த் | திரைப்பட கூட்டமைப்பின் துணை தலைவராக ஐசரி கணேஷ் தேர்வு | சீனு ராமசாமி மனைவியை பிரிவதாக அறிவிப்பு | சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன் - சாய் பல்லவி கோபம் |
பாலிவுட் நடிகை கங்கா ரணவத் தற்போது எமர்ஜென்சி என்கிற படத்தில் நடித்து வருகிறார். கடந்த சில வருடங்களுக்கு முன்பு மணிகர்ணிகா என்கிற படத்தில் நடித்தபோது அவருக்கும் படத்தின் இயக்குனருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் பாதியிலேயே இயக்குனரை நீக்கிவிட்டு தானே டைரக்சன் பொறுப்பை அந்த படத்தை இயக்கினார். அந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. அதைத் தொடர்ந்து தற்போது இரண்டாவது முறையாக மறைந்த பாரத பிரதமர் இந்திராவின் வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தி உருவாகிவரும் இந்த எமர்ஜென்சி படத்தையும் தானே இயக்கியுள்ளார்.
இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரொடக்சன் வேலைகளும் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. படத்தொகுப்பு முடிந்த நிலையில் இந்த படத்தை முதல் ஆளாக பிரபல கதாசிரியரும், இயக்குனர் ராஜமவுலியின் தந்தையுமான விஜயேந்திர பிரசாத்தை அழைத்து போட்டு காட்டியுள்ளார் கங்கனா. படத்தை பார்த்த விஜயேந்திர பிரசாத் பல இடங்களில் கண்ணீர் விட்டு அழுதாராம். இந்த தகவலை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள கங்கனா, “அவர் இந்த படத்தை பார்த்து முடித்ததும் உன்னை நினைத்து மிகவும் பெருமைப்படுகிறேன் மகளே” என்று பாராட்டியதாக நெகிழ்வுடன் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கு முன்னதாக கங்கனாவுக்கு உதவியாக மணிகர்ணிகா படத்தின் கதை விவாதத்தில் விஜயந்திர பிரசாத் மிகப்பெரிய பங்கு வகித்தார். அது மட்டுமல்ல தமிழில் தலைவி படத்தில் கங்கனா நடித்தபோது அந்தப் படத்திற்கும் கதை உருவாக்கத்தில் மிகப்பெரிய பொறுப்பு வகித்ததுடன், ஜெயலலிதா கதாபாத்திரத்தில் கங்கனா சிறப்பாக நடிக்க உறுதுணையாகவும் இருந்தவர் விஜயேந்திர பிரசாத். அவரை குரு ஸ்தானத்தில் வைத்துள்ளதாலேயே அவரை அழைத்து முதல் நபராக தனது எமர்ஜென்சி படத்தை திரையிட்டு காட்டி உள்ளார் கங்கனா.