கல்வான் பள்ளத்தாக்கு மோதல் கதையில் உருவாகும் படத்தில் சல்மான் கான்! | தக்லைப் படத்தை அடுத்து தெலுங்கு நடிகரை இயக்கும் மணிரத்னம்! | வாடிவாசல் படத்திற்காக 100 சதவீத அர்ப்பணிப்பை கொடுப்பேன்: வெற்றிமாறன் வெளியிட்ட தகவல் | சென்னை விமான நிலையத்தில் சந்தித்துக் கொண்ட விஷால் - விஜய் சேதுபதி! | ராமாயணா படத்தில் யஷ்-க்கு ஜோடியாகும் காஜல் அகர்வால்! | பாகுபலி கதாசிரியரின் அறிவுறுத்தலின்படி கண்ணப்பாவில் மீண்டும் சேர்க்கப்பட்ட மோகன்லால் கதாபாத்திரம் | வாய் பேசா கதாபாத்திரத்தில் சிறை கைதியாக நடித்துள்ள ரவீணா ரவி | அம்மாவின் 2வது திருமணம் ஏற்படுத்திய பாதிப்பு: மனம்திறந்த லிஜோ மோல் ஜோஸ் | பஸ் டிரைவர்களின் பல்லை உடைப்பேன் ; சுரேஷ்கோபி மகன் ஆவேசம் | ஜெயிலர்-2 படப்பிடிப்பில் ரஜினியை சந்தித்து வாழ்த்து பெற்ற மலையாள நடிகர் |
பிரேம் இயக்கத்தில், துருவா சர்ஜா நடித்து வரும் படம் 'கேடி - தி டெவில்'. பெரிய பட்ஜெட்டில் பான் இந்தியா படமாக உருவாகி வருகிறது. ஷில்பா ஷெட்டி, ரவிச்சந்திரன், அமிர் குரைஷி உள்பட பலர் நடிக்கிறார்கள், சஞ்சய் தத் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார்.
இந்த படத்தின் படப்பிடிப்பு, பெங்களூருவில் உள்ள மகடி சாலையில் நடந்து வருகிறது. இதில் துருவா சர்ஜா மற்றும் சஞ்சய் தத் ஆகியோர், மோதும் சண்டை காட்சி படமாக்கப்பட்டது. இந்த சண்டை காட்சியை ஸ்டண்ட் இயக்குனர் ரவி வர்மா இயக்கி வந்தார். இந்த சண்டை காட்சியின் போது, படப்பிடிப்புகளுக்கு பயன்படுத்தப்படும் டம்மி குண்டுகள் பயன்படுத்தப்பட்டன. இதில் எதிர்பாராதவிதமாக டம்மி குண்டு ஒன்று பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது.
இதில் சஞ்சய்தத்திற்கு காயம் ஏற்பட்டதாகவும், பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல் பரவியது. இதை சஞ்சய் தத் மறுத்துள்ளார்.
அவர் வெளியிட்ட பதிவு : ‛‛எனக்கு காயம் ஏற்பட்டதாக செய்திகள் வருகின்றன. அவை உண்மையல்ல. கடவுள் அருளால் நான் நலமாக உள்ளேன். நான் கேடி படத்தின் ஷூட்டிங்கில் இருக்கிறேன். என்னுடைய காட்சிகளை படமாக்கும்போது படக்குழுவினர் மிகவும் கவனமாக இருக்கிறார்கள். உங்கள் அனைவரின் அக்கறைக்கும் நன்றி'' என தெரிவித்துள்ளார்.