தக்க சமயத்தில் உதவி செய்வதில் சூர்யா எம்ஜிஆர் மாதிரி : விநியோகஸ்தர் சக்திவேலன் | அமெரிக்காவில் சிவகார்த்திகேயன், வெங்கட்பிரபு | பிக்பாஸ் ஜூலிக்கு டும் டும் : நிச்சயதார்த்தம் நடந்தது | பெங்களூருவிலும் மல்டிபிளக்ஸ் தியேட்டர் திறக்கும் மகேஷ் பாபு | படப்பிடிப்பு தொடங்கும் முன் ஓடிய ஹீரோயின் : டக்கென கமிட்டான மெகாலி | படையப்பா ரீ ரிலீஸ் : ரம்யா கிருஷ்ணன் மகிழ்ச்சி | உண்மை கதையில் விக்ரம் பிரபு | மீண்டும் தள்ளிப் போகிறதா லவ் இன்சூரன்ஸ் கம்பெனி? | காட்டேஜ் 'பெட்' சொல்லும் கதை | பெரும் தொகைக்கு விற்கப்பட்ட 'த்ரிஷ்யம் 3' |

தேசிய விருது பெற்ற நடிகை வித்யாபாலன். ஹிந்தியில் தி டர்டி பிக்சர்ஸ் உள்ளிட்ட ஏராளமான வெற்றி படங்களில் நடித்துள்ளார். தமிழில் அஜித் நடித்த நேர்கொண்ட பார்வை படத்தில் அவரது மனைவியாக ஒரு குடும்ப பாங்கான வேடத்தில் நடித்தார். தற்போது கதைக்கு முக்கியத்துவம் வாய்ந்த வேடங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார்.
இந்த நிலையில் நியூஸ் பேப்பர் ஒன்றை மட்டுமே வைத்து தனது உடம்பை மறைத்தபடி அவர் ஒரு போட்டோ சூட் நடத்தி இருக்கிறார். இந்த போட்டோக்களை எடுத்த புகைப்பட கலைஞர் டபூ ரத்னானி அந்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்திருக்கிறார். சோசியல் மீடியாவில் வைரலாகி வரும் இந்த புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் பலத்த அதிர்ச்சி அடைந்து இருக்கிறார்கள். அதோடு இந்த புகைப்படங்கள் தி டர்ட்டி பிக்சர்ஸ் படத்தை மீண்டும் நினைவுபடுத்துவதாக அமைந்திருக்கிறது என்று கமெண்ட் கொடுத்து வருகிறார்கள்.