ஒரே மாதத்தில் திரைக்கு வரும் கிர்த்தி ஷெட்டியின் மூன்று படங்கள் | 100 பேர் வந்தாலும்....! பிரதீப் ரங்கநாதனின் 'டியூட்' படத்தின் டிரைலர் வெளியானது! | ஆனந்த்.எல்.ராய் இயக்கத்தில் இணையும் முன்னனி நடிகைகள் | இம்மாதத்தில் ஓடிடியில் வெளியாகும் 'லோகா, இட்லிகடை' | 500 கோடி வசூலை நோக்கி 'காந்தாரா சாப்டர் 1' | அரசன் படத்தின் புதிய அப்டேட் : சுதீப் இணைய வாய்ப்பு | சிவகார்த்திகேயன் உடன் இணையும் ஸ்ரீ லீலா | பைசன் படத்தின் தணிக்கை சான்று மற்றும் ‛ரன்னிங் டைம்' | நான் அசாம், தாய்மொழி நேபாளம் : கயாடு லோகர் புது தகவல் | பாபாஜி குகையில் ரஜினி தியானம், வழிபாடு |
கடந்த ஆண்டு 2021-ல் ரோகித் ஷெட்டி இயக்கத்தில் அக்ஷய் குமார், கேத்ரீனா கைப் நடித்து வெளியான 'சூர்யவன்ஷி' திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தின் வெற்றிக்குப் பிறகு அக்ஷய் குமார் நடிப்பில் வெளியான திரைப்படங்கள் தொடர் தோல்வியை சந்தித்து வருகிறது .
இந்த நிலையில் அக்ஷய் குமார் நடிப்பில் சில நாட்களுக்கு முன்பு வெளியான திரைப்படம் 'செல்பி' . இந்த படமும் குறைந்த வசூலாயும், கலவையான விமர்சனத்தையும் பெற்று தோல்வியை தழுவியது. தனது படங்களின் தொடர் தோல்வி குறித்து தற்போது அக்ஷய் குமார் மனம் திறந்துள்ளார்.
அவர் கூறுகையில், "இப்படி நடப்பது எனக்கு முதன்முறையல்ல. என்னுடைய திரைப்பயணத்தில் ஒரே நேரத்தில் 16 தோல்விப்படங்களை கொடுத்திருக்கிறேன். ஒரு காலத்தில் 8 படங்கள் தொடர்ந்து தோல்வியடைந்துள்ளன.
படங்கள் வெற்றி பெறாததற்கு நான் தான் காரணம். எனது தவறு தான் காரணம். பார்வையாளர்கள் மாறிவிட்டனர். நானும் மாற வேண்டிய தேவை எழுந்துள்ளது. நாம் நம்மை மாற்றியாக வேண்டும். மீண்டும் தொடக்கத்திலிருந்து ஆரம்பிக்க வேண்டும். பார்வையாளர்கள் வழக்கமானதைத் தாண்டி வேறொன்றை எதிர்பார்க்கிறார்கள்.
தொடர்ந்து படங்கள் தோல்வியடைகிறது என்றால் நாம் மாற வேண்டிய நேரம் வந்துவிட்டது . நான் மாற முயற்சிக்கிறேன் . இப்போதைக்கு என்னால் செய்ய முடிந்தது அதுதான். படம் ஓடவில்லை என்றால் அதற்கு காரணம் ரசிகர்கள் அல்ல. காரணம் எனது விருப்பத்தேர்வு தான். ஒருவேளை எனது படங்களில் சரியான அம்சங்கள் இல்லாமல் இருந்திருக்கலாம்" .
இவ்வாறு அக்ஷய் குமார் தெரிவித்துள்ளார்.