மார்ச் 12ல் வெளியாகும் மேட் இன் கொரியா | தெலுங்கில் பிஸியாகும் ருக்மணி வசந்த் | சர்வதேச விருதினை வென்ற ‛பூங்' படக்குழுவை பாராட்டிய பிரதமர் மோடி | திரிஷ்யம் 3 படத்தில் நடிக்க மறுத்த வெங்கடேஷ் | 20 ஆண்டுகளுக்கு பின் தென்னிந்திய படத்தில் சஞ்சீதா ஷேக் ரீஎன்ட்ரி | மீண்டும் இணையும் ‛மை லார்ட்' கூட்டணி | புருஷன் படப்பிடிப்பு துவங்கியது | உதய்ப்பூர் புகைப்படங்களை தனித்தனியே பகிரும் விஜய் தேவரகொண்டா ராஷ்மிகா | புது முகங்களின் 'ஹைக்கூ ' | 'காந்தாரா' வழக்கு ரத்து செய்ய ரன்வீர் சிங் மனு |

சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில், விஷால் - சேகர் இசையமைப்பில், ஷாரூக்கான், தீபிகா படுகோனே, ஜான் ஆபிரகாம் மற்றும் பலர் நடிக்கும் படம் 'பதான்'. அடுத்த வருடம் 2023 ஜனவரி 25ம் தேதி வெளியாக உள்ள இப்படத்தின் முதல் சிங்கிளான 'பேஷ்ரம்…' பாடல் நேற்று யு டியூபில் வெளியானது.
சில தினங்களுக்கு முன்பு இப்பாடல் வெளியீடு பற்றிய அறிவிப்பிலேயே தீபிகா படுகோனேவின் நீச்சல் உடை போஸ்டரை வெளியிட்டு ரசிகர்களிடம் அதிக ஆர்வத்தைத் தூண்டினார்கள். அதற்கேற்றபடி படத்தில் கவர்ச்சி ஆட்டம் ஆடியுள்ளார் தீபிகா. அவரைச் சுற்றி நடனமாடுபவர்கள் பிகினி உடையிலும், கவர்ச்சி உடையிலும் நடனமாடியுள்ளனர். இந்தப் பாடல் எப்படி சென்சாரிலிருந்து தப்பிக்கப் போகிறது என்று தெரியவில்லை.
வெளியான 24 மணி நேரத்திற்குள்ளாக 16 மில்லியன் பார்வைகளை இப்பாடல் கடந்துள்ளது. பாடலைப் பாடியுள்ள ஷில்பாவின் குரலும், தீபிகாவின் தோற்றம், நடனம் ஆகியவை அசத்தலாக உள்ளது என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள்.