'சந்திரமுகி 2' அப்டேட் கொடுத்த கங்கனா ரணவத் | பாலகிருஷ்ணா பட இயக்குனரைப் பாராட்டிய ரஜினிகாந்த் | அதிவேக சாதனையில் 'பதான்' | சிவாவை இயக்குகிறார் ‛தங்கமீன்கள்' ராம்? | அமெரிக்காவில் ஆர்.ஆர்.ஆர் சாதனையை முறியடித்த பதான் | பிரபாஸ் படத்தில் இணைந்த மாளவிகா மோகனன் | விஜய் 67வது படத்திற்காக கெட்டப்பை மாற்றிய அர்ஜுன் | 15 ஆண்டு பகை - விஜய்யுடன் பேசுவதற்கு தயாராக இருக்கும் நெப்போலியன்! | சூர்யாவின் வாடிவாசல் படத்தில் இணைந்த அவதார் கிராபிக்ஸ் குழு! | சிம்புவிற்கு பதிலாக பிரதீப் ரங்கநாதன்! |
விவேக் அக்னிகோத்ரி இயக்கத்தில் அனுபம் கேர் நடித்து வெளியான படம் ‛தி காஷ்மீர் பைல்ஸ்'. இந்த படத்திற்கு சில சர்ச்சைகள் எழுந்தாலும் வரவேற்பை பெற்று ரூ.100 கோடி வசூலை அள்ளியது. இந்த படம் கோவாவில் நடந்த சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது.
இதற்கு ‛‛வெறுப்புணர்வை தோண்டும் மோசமான படம் இது'' என இந்த விழாவின் தேர்வுக் குழு தலைவரான இஸ்ரேல் இயக்குனர் நடாவ் லாபிட் கூறியிருந்தார். இவரின் கருத்திற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. பலரும் அவருக்கு கண்டம் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் இதற்கு பதிலளித்துள்ள அனுபம் கேர், ‛‛பொய் எவ்வளவு பிரம்மாண்டமாக இருந்தாலும் அது வீழ்ந்துவிடும். உண்மையின் முன்னால் அது தாக்குப் பிடிக்காது" என்றார்.
அதேப்போன்று இயக்குனர் அக்னி கோத்ரி கூறுகையில், ‛‛உண்மை எப்போதும் பேராபத்தானது. அது சிலரை பொய் பேசவைத்துவிடும்'' என்றார்.