அடுத்த சிம்பொனி: இளையராஜா அறிவிப்பு | 'மகுடம்' படத்தின் இயக்குனர் ஆனார் விஷால்; அவரே அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் | அட்லி - அல்லு அர்ஜூன் படம் ஒரு சினிமா புரட்சி! ரன்வீர் சிங் வெளியிட்ட தகவல் | 2025ல் ராஷ்மிகா மந்தனா நடிப்பில் வெளியாகும் இறுதி படம் 'தி கேர்ள் ப்ரெண்ட்' | துல்கர் சல்மானின் காந்தா நவம்பர் 14ம் தேதி வெளியாகிறது! | நான் விருது வாங்கினாலும் குப்பை தொட்டியில் தான் போடுவேன்! : விஷால் | முதல் முறையாக முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் சம்யுக்தா! | பிளாஷ்பேக்: தெவிட்டாத திரையிசைப் பாடல்கள் தந்த தித்திக்கும் “தீபாவளி” நினைவுகள் | டேட்டிங் ஆப் மூலம் இரண்டாவது திருமணம் செய்த வசந்த பாலன் பட நாயகி | கதாநாயகன் ஆனார் 'சிறகடிக்க ஆசை' மனோஜ்! |
பனாஜி: 'தி காஷ்மீர் பைல்ஸ்'. திரைப்படம் வெறுப்புணர்வை பரப்பும் படம் என கோவா சர்வதேச திரைப்பட விழா தேர்வுக்குழு தலைவர் நாடவ் லேபிட் அதிருப்தி தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
53வது சர்வதேச கோவா திரைப்பட விழா கடந்த 20ஆம் தேதி துவங்கி நேற்று நிறைவடைந்தது. இதில் ஒவ்வொரு ஆண்டும் உலகின் பல்வேறு நாடுகளின் திரைப்படங்கள் இதில் திரையிடப்பட்டன. 79 நாடுகளைச் சேர்ந்த 280க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் திரையிடப்பட்டன. இந்திய பனோரமாவில் 25 திரைப்படங்கள் ஒளிபரப்பப்பட்டன.
இந்த விழாவில் இயக்குனர் விவேக் அக்னிஹோத்ரி இயக்கியுள்ள 'தி காஷ்மீர் பைல்ஸ்' படம் திரையிடப்பட்டது. இப்படத்திற்கு விருதுகள் எதும் கிடைக்கவில்லை எனினும் நிறைவு நாளில் தேர்வுக்குழு தலைவர் பேசியது, தி காஷ்மீர் பைலஸ் திரைப்படம் வெறுப்புணர்வை தூண்டும் வகையில் தயாரிக்கப்பட்ட இழிவான திரைப்படம். பிரசார தன்மை கொண்டதாக உள்ளது. இத் திரைப்படத்தை திரையிடப்பட்டதற்கு அதிருப்தியைத் தெரிவித்துக் கொள்கிறோம் என்றார். இது தொடர்பான வீடியோவும் இணையத்தில் வெளியாகி உள்ளது. பலரும் நாடவ் லேபிட்டின் பேச்சை தங்கள் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.