நிவேதா பெத்துராஜுக்கு திருமணம் | 'திரெளபதி' இரண்டாம் பாகத்தில் சரித்திர கதை | பிளாஷ்பேக் : காமெடி நாயகனாக விஜயகாந்த் நடித்த படம் | சிரிப்பு சத்தம், காமெடி பஞ்சத்தில் தவிக்கும் தமிழ் சினிமா | பிளாஷ்பேக் : உலகம் முழுக்க வெற்றி பெற்று தமிழில் தோற்ற கதை | ‛பெத்தி' பட பாடலுக்கு ஆயிரம் பேருடன் நடனமாடிய ராம்சரண் | தீபாவளி போட்டியில் டீசல் : ஆக்ஷன் ஹீரோவாக ஹரிஷ் கல்யாண் | அங்கிளான என்னை அண்ணனாக மாற்றிவிட்டார் பஹத் பாசில் ; இயக்குனர் சத்யன் அந்திக்காடு பெருமிதம் | ரீல்ஸ் பைத்தியமாக நடிக்கும் வர்ஷினி வெங்கட் | பாலாஜி சக்திவேல் ஜோடியான வீடு அர்ச்சனா |
பாலிவுட்டின் முன்னணி கதாநாயகிகளில் ஒருவர் பிரியங்கா சோப்ரா. 2000ம் ஆண்டில் மிஸ் வேர்ல்டு பட்டத்தை வென்றவர். விஜய் நடித்து 2002ல் வெளிவந்த 'தமிழன்' படத்தின் மூலம் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானார். அதன் பிறகு ஹிந்தியில் அறிமுகமாகி பல வெற்றிப் படங்களில் நடித்துள்ளார்.
2018ல் பிரபல அமெரிக்க பாடகர், நடிகர் நிக் ஜோனஸைக் காதலித்து கல்யாணம் செய்து கொண்டார். இந்த ஆண்டு துவக்கத்தில் வாடகைத் தாய் மூலம் இத்தம்பதியருக்கு பெண் குழந்தை பிறந்தது. அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் வசித்து வரும் பிரியங்கா மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா வந்துள்ளார்.
இந்தியா புறப்படுவதற்கு முன்பு, “கடைசியாக, மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு வீட்டுக்குச் செல்கிறேன்,” என தனது விமானப் பயணத்திற்கான போர்டிங் பாஸ்--ஐ பதிவிட்டிருந்தார். மும்பை வந்திறங்கியதும், “மும்பை, என் அன்பே” எனப் பதிவிட்டுள்ளார்.
“இட்ஸ் ஆல் கமிங் பேக் டூ மீ' என்ற ஆங்கிலப் படத்தில் நடித்து முடித்துள்ள பிரியங்கா, 'ஜீ லே ஜாரா' என்ற ஹிந்திப் படத்தில் காத்ரினா கைப், ஆலியா பட் ஆகியோருடன் இணைந்து நடிக்க உள்ளார்.