இப்போதைக்கு நான் சாக விரும்பவில்லை : விரக்தியில் பிரபல பாடகர் | நாகசைதன்யா நடிக்கும் புதிய வெப்சீரிஸ் ‛மாய சபா' | தொடரும் வில்லத்தனம் : வெளியான மம்முட்டியின் கலம்காவல் இரண்டாவது லுக் | மோகன்லாலுக்கு பரிசாக கால்பந்து வீரர் மெஸ்ஸி கையெழுத்திட்டு அனுப்பிய ஜெர்ஸி | மலையாள வில்லன் நடிகர் மீதான போதை வழக்கில் போலீசாருக்கு புதிய சிக்கல் | மாரி செல்வராஜ் - தனுஷ் கூட்டணியில் ஏஆர் ரஹ்மான் | குட் பேட் அக்லி 11 நாள் வசூல் முழு விவரம் | காதலருடன் (?) திருப்பதியில் தரிசனம் செய்த சமந்தா | பிராமணர்கள் குறித்து அவதுாறு கருத்து: மன்னிப்பு கேட்டார் 'மஹாராஜா' நடிகர் | சினிமாவை வாழ விடுங்கள்: நடிகை விஜயசாந்தி |
பாலிவுட் திரையுலகில் ஆண்களுக்கு சவால் விடக்கூடிய வகையில் பல வருடங்களாக தொடர்ந்து வெற்றிகரமான, துணிச்சலான தயாரிப்பாளராக வலம் வருபவர் ஏக்தா கபூர். சர்ச்சைக்குரிய படங்களை தயாரிப்பதற்கு தயங்காத இவர், தற்போது ஓடிடி தளங்கள் வந்துவிட்ட நிலையில் வெப்சீரிஸ் பக்கம் தனது கவனத்தை திருப்பியுள்ளார். அந்தவகையில் இவர் ஏற்கனவே தயாரித்த ட்ரிபிள் எக்ஸ் என்கிற வெப்சீரிஸின் இரண்டாம் பாகம் தற்போது ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ளது. இதில் ராணுவத்தில் பணிபுரிபவர்கள் பற்றியும் அவர்களது மனைவிகள் பற்றியும் தரக்குறைவான காட்சிகளை இடம்பெறச் செய்துள்ளதாக ஏக்தா கபூர் மீது முன்னாள் ராணுவ வீரர் ஒருவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இதுகுறித்து விசாரித்த இரண்டு நீதிபதிகள் அடங்கிய பெஞ்ச், ஏக்தா கபூரின் இந்த செயலுக்கு கடுமையான கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுபற்றி நீதிபதிகள் கருத்து தெரிவித்தபோது, “ஏதாவது செய்தே ஆக வேண்டும்.. நீங்கள் நாட்டிலுள்ள இளைய தலைமுறையின் மனதைக் கெடுக்கும் வேலையில் இறங்கியுள்ளீர்கள். இன்று ஓடிடி தளத்தில் எல்லாமே கிடைக்கிறது. நீங்கள் எந்தவிதமான சாய்ஸை மக்களுக்கு கொடுத்துக்கொண்டு இருக்கிறீர்கள்.? இளைஞர்களின் மனதை கெடுக்கும் வேலையைத்தான் செய்துகொண்டு இருக்கிறீர்கள்” என்ற தங்களது கோபத்தை வெளிப்படுத்தினர்.
மேலும் ஏக்தா கபூருக்கு ஆதரவாக ஆஜரான வழக்கறிஞறிடம், “ஒவ்வொரு முறையும் அவருடைய இதுபோன்ற வழக்குகளுக்காக நீங்கள் இங்கே வருகிறீர்கள்.. இதை நாங்கள் பாராட்ட முடியாது. இந்த நீதிமன்றம் வலிமையானவர்களுக்கானது அல்ல.. குரல் கொடுக்க முடியாத எளியவர்களுக்கானது. நீங்கள் இனி இதுபோன்று ஒரு பெட்டிஷன் கொண்டு வந்தால், அதற்கு நாங்கள் நிச்சயமாக ஒரு விலை வைக்க நேரிடும். இதை தயவுசெய்து உங்களுடைய கிளையன்ட்டிடம் தெரியப்படுத்துங்கள்” என்றும் கடுமை காட்டியுள்ளனர்.
அதுமட்டுமல்ல பீகாரில் உள்ள பெகுசராயில் உள்ள கீழமை நீதிமன்றம் ஒன்றில் இதே காரணத்திற்காக ஏக்தா கபூர் மீது தொடுக்கப்பட்ட வழக்கில் அவருக்கு வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.