பிரதீப் ரங்கநாதனின் ‛எல்ஐகே' ரிலீஸ் மீண்டும் தள்ளிப்போகிறதா? | மீண்டும் இயக்குனராக களமிறங்கும் பேரரசு! | சூர்யா 47வது படத்தின் புதிய அப்டேட்! | ஆஸ்கர் வென்ற பாடல் பிரபலத்துடன் இணையும் பிரபாஸ்! | ‛வாரணாசி' படத்தால் நாடே பெருமைப்படும்: மகேஷ் பாபு பேச்சு | ஆறு வருடமாக பாலியல் டார்ச்சர் செய்த துணை நடிகை மீது போலீஸில் நடிகர் புகார் | பிடிவாதமாக பெட்ரோலை குடித்த அஜித்; திருப்பதியில் அஜித் எடுத்த ரிஸ்க் | பிளாஷ்பேக்: முதல் ஒளி வடிவம் பெற்ற ஜெயகாந்தனின் “உன்னைப் போல் ஒருவன்” | ஹிந்தி பட புரமோஷனில் காதலுக்கு விளக்கம் கொடுத்த தனுஷ் | ‛நூறு சாமி'க்காக காத்திருக்கும் ‛லாயர்' |

'எம்எஸ் தோனி' படத்தில் நடித்து பிரபலமான பாலிவுட் நடிகரான சுஷாந்த் சிங் ராஜ்புத் இரண்டு வருடங்களுக்கு முன்பு தற்கொலை செய்து கொண்டார். அவரது தற்கொலைக்கு பாலிவுட்டில் இருக்கும் வாரிசு அரசியல் என்று சொல்லப்படும் 'நொப்போட்டிசம்' தான் காரணம் என பாலிவுட் சினிமா ரசிகர்கள் இன்று வரை குற்றம் சாட்டி வருகின்றனர்.
அதனால், வாரிசு நடிகர்கள், நடிகைகள் நடித்து கடந்த இரண்டு வருடங்களாக வெளிவரும் படங்களைப் பற்றி கடுமையாக எதிர்த்தும், விமர்சித்தும் வருகிறார்கள். 'பாய்காட் பாலிவுட்' என்ற பொதுவான டிரெண்டிங் இருந்தாலும் அவ்வப்போது படங்களின் வெளியீட்டிற்கேற்ப அந்த டிரெண்டிங் மாறும்.
வரும் செப்டம்பர் மாதம் 9ம் தேதி வாரிசு நட்சத்திரங்களான ரன்பீர் கபூர், ஆலியா பட் நடித்து வெளிவர உள்ள 'பிரம்மாஸ்திரா' படத்திற்கு எதிராக ஏற்கெனவே 'பாய்காட்' டிரெண்டிங் அடுத்தடுத்து நடந்து வருகிறது. இந்நிலையில் அடுத்த வாரிசு நடிகர்களின் வெளியீடான 'விக்ரம் வேதா' படத்திற்கான 'பாய்காட்' டிரெண்டிங்கையும் இப்போதே ஆரம்பித்துவிட்டார்கள்.
தமிழில் விஜய் சேதுபதி, மாதவன் நடித்து வெளிவந்த 'விக்ரம் வேதா' படம் ஹிந்தியில் வாரிசு நடிகர்களான ஹிருத்திக் ரோஷன், சைப் அலிகான் நடிப்பில் உருவாகியுள்ளது. தமிழில் படத்தை இயக்கிய புஷ்கர் காயத்ரி ஹிந்தியிலும் இயக்கியுள்ளார்கள். இப்படத்தின் டீசர் பத்து நாட்களுக்கு முன்பு வெளியானது. இந்த மாதம் செப்., 8ம் தேதி டிரைலர் வெளியாகிறது. செப்டம்பர் 30ம் தேதி படம் வெளியாக உள்ளது.
'பாய்காட்' டிரெண்டுகளை 'பிரம்மாஸ்திரா, விக்ரம் வேதா' படங்கள் எப்படி சமாளிக்கப் போகிறது என பாலிவுட் மட்டுமல்ல இந்தியத் திரையுலகமே காத்துக் கொண்டிருக்கிறது.