லாயராக அதுல்யா ரவி, மீனவனாக நான் : டீசல் ரகசியம் சொல்லும் ஹரிஷ் கல்யாண் | காதல், நகைச்சுவை கதைகளில் நடிக்க ஆர்வமாக இருக்கும் ருக்மணி வசந்த் | விண்வெளியில் நான்காவது திருமணம் செய்கிறாரா ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸ் | அஜித் 64வது படத்தின் அறிவிப்பு எப்போது? : ஆதிக் ரவிச்சந்திரன் தகவல் | ஓடிடிக்கு வருகிறது லோகா சாப்டர் 1 | டியூட் படத்தில் பிரதீப் பாடிய ‛சிங்காரி' பாடல் வெளியானது | தனுஷ் படத்தின் நாயகி யார்... நீடிக்கும் குழப்பம்? | ஜீவா, ராஜேஷ் படத்தில் இணையும் ரம்யா ரங்கநாதன் | ‛பேராண்டி' படத்தில் மனோரமா பாடிய கடைசி பாடல் | 'பைசன்' என் முதல் படம் மாதிரி: துருவ் விக்ரம் |
கடந்த 2003ல் பாலிவுட்டில் சஞ்சய் தத் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றிபெற்ற படம் தான் முன்னாபாய் எம்.பி.பி.எஸ். அந்த சமயத்தில் சர்ச்சைகளில் சிக்கி சரிந்து கிடந்த சஞ்சய் தத்தின் மார்க்கெட்டை தூக்கி நிறுத்திய இந்தப்படத்தை பிரபல இயக்குனர் ராஜ்குமார் ஹிரானி இயக்கினார்.. இந்தப்படம் தமிழில் வசூல் ராஜா எம்.பி.பி.எஸ், தெலுங்கில் சங்கர்தாதா எம்.பி.பி.எஸ், கன்னடத்தில் உப்பிதாதா எம்.பி.பி.எஸ் என்ற பெயரில் ரீமேக்காகி அங்கும் பெரும் வெற்றியைப் பெற்றது அனைவரும் அறிந்த வரலாறு..
இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இதன் 2வது பாகமாக லஹே ரகோ முன்னாபாய் படத்தை இயக்கினார் ராஜ்குமார் ஹிரானி. இந்தப்படமும் முதல் பாகத்தை போலவே சூப்பர் டூப்பர் ஹிட் ஆனதுடன் தெலுங்கில் சிரஞ்சீவி நடிப்பில் ரீமேக் செய்து அங்கேயும் பெரும் வெற்றி பெற்றது.
கடந்த பத்து வருடங்கலுக்கு மேலாக முன்னாபாய் படத்தின் மூன்றாம் பாகம் எப்போது என்கிற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே இருந்து வருகிறது. கடந்த நான்கு வருடங்களுக்கு முன்பு கூட இயக்குனர் ராஜ்குமார் ஹிரானி, முன்னாபாய்' படத்தின் மூன்றாம் பாக வேலைகளை துவங்கிவிட்டதாக அறிவித்தார்.. ஆனால் அது அறிவிப்பாகவே நிற்கிறது.
இந்த நிலையில் அந்த இரண்டு பாகங்களிலும் சஞ்சய் தத்தின் வலதுகையாக (தமிழில் பிரபு நடித்திருந்தார்) கூடவே பயணிக்கும் கதாபாத்திரத்தில் நடித்திருந்த நடிகர் அர்ஷத் வர்ஷி முன்னாபாய் மூன்றாம் பாகத்துக்கு இனி வாய்ப்பில்லை என்று ஒரு அதிர்ச்சி தகவலை கூறி உள்ளார்.. எல்லோரையும் போல படத்தில் நடித்த தானும் மற்ற சில முக்கிய நடிகர்களும் பத்து வருடங்களுக்கு மேலாக மூன்றாம் பாகத்திற்காக எதிர்பார்த்து சோர்ந்துபோய் விட்டதாகவும் இனிமேலும் மூன்றாம் பாகம் நிகழ வாய்ப்பில்லை என்றும் சமீபத்திய பெட்டி ஒன்றில் கூறியுள்ளார்..