வாரணாசி கோவிலுக்கு சென்று வழிபட்ட ஸ்ரீலீலா | சங்கராந்தியில் ஒரு 'ஷங்கரா'ந்தி : கேம் சேஞ்சர் டப்பிங்கில் வியந்த எஸ்.ஜே.சூர்யா | 6 வருடங்களில் 6வது முறையாக பஹத் பாசிலுடன் இணைந்த இயக்குனர் | நான் தற்கொலை செய்தால் அரசு தான் பொறுப்பு : நடிகர் முகேஷ் மீது பாலியல் புகார் அளித்த நடிகை விரக்தி | தம்பிக்கு கை கொடுத்தவர்கள் அண்ணனை கவிழ்த்தது ஏன் ? வைராலகும் மீம்ஸ் | ஒரே படத்தில் அறிமுகமாகும் சின்னத்திரை நடிகைகள் | மலையாள நடிகர்கள் மீது பாலியல் புகார் கூறிய நடிகை திடீர் பல்டி | நீதிமன்றத்தில் நியாயம் கேட்கும் நாய் | பிளாஷ்பேக் : எம்.ஜி.ஆருடன் வாள் சண்டை போட்ட நடிகை | பிளாஷ்பேக் : எம்.ஜி.ஆருடன் மவுன யுத்தம் நடத்திய ஏ.எல்.சீனிவாசன் |
இந்திய அளவில் பாலிவுட்டில் எடுக்கப்படும் ஹிந்திப் படங்கள்தான் வசூல் ரீதியாக பல சாதனைகளைப் படைக்கும். ஆனால், இந்த 2022ம் வருடத்தில் இரண்டு தென்னிந்தியப் படங்கள் தான் வசூல் சாதனை படைத்துள்ளது. 'ஆர்ஆர்ஆர், கேஜிஎப் 2' இரண்டு படங்களுமே மிகப் பெரும் வசூலைக் குவித்தது.
இது குறித்து ஏற்கெனவே ராம்கோபால் வர்மா சில பல கருத்துக்களைத் தெரிவித்திருந்தார். இப்போது மீண்டும் கிண்டலான ஒரு கருத்தைப் பதிவிட்டுள்ளார். “தெலுங்கு, கன்னடப் படங்கள் ஹிந்திப் படங்களை கோவிட் வைரஸ் போல நோய்த் தொற்றுக்கு ஆளாக்கிவிட்டன. பாலிவுட் விரைவில் தடுப்பூசியுடன் வரும் என எதிர்பார்க்கிறேன்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.
பாலிவுட்டின் இளம் முன்னணி நடிகரான ஷாகித் கபூர் நடித்து கடந்த வாரம் வெளிவந்த 'ஜெர்சி' படம் பாக்ஸ் ஆபீசில் தோல்வியடைந்துவிட்டது. கடந்த சில மாதங்களாகவே பாலிவுட்டில் 'காஷ்மீர் பைல்ஸ்' தவிர வேறு எந்தப் படமும் வசூலைத் தரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.