Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

பீஸ்ட், கேஜிஎப் 2வுடன் மோதவில்லை: ஷாகித் கபூர்

09 ஏப், 2022 - 14:19 IST
எழுத்தின் அளவு:
We-are-not-competitive-with-Beast-and-KGF-2-says-Sahidkapoor

விஜய் நடித்த பீஸ்ட் படம் வருகிற 13ம் தேதி வெளியாகிறது. 14ம் தேதி யஷ் நடித்த கேஜிஎப் 2 வெளியாகிறது. ஒரே நேரத்தில் இரு பெரிய படங்கள் மோத வேண்டாம் என்று பலரும் கருத்து சொன்ன நிலையில் இரு படத்தின் தயாரிப்பாளர்களும் தங்கள் முடிவில் இருந்து பின் வாங்க விரும்பாததால் இரு படங்களும் வெளிவருவது உறுதியாகி இருக்கிறது.

இரு படங்களும் ஹிந்தியிலும் வெளியாகும் நிலையில் அதே தேதியில் ஷாகித் கபூர், மிர்னால் தாகூர் நடித்த 'ஜெர்ஸி' படமும் வெளியாகிறது. தெலுங்கில் வெளியான ஜெர்ஸி படத்தின் இந்தி ரீமேக் தான் இந்த படம். தெலுங்கில் படத்தை இயக்கிய கெளதம் தான் ஹிந்தியிலும் இப்படத்தை இயக்கி உள்ளார்.

இந்த இரு பெரிய படங்களின் வெளியீட்டால் ஜெர்ஸியின் வசூல் பாதிக்கலாம் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் இதுகுறித்து ஷாகித் கபூர் கூறியிருப்பதாவது: எங்கள் படத்தை வெளியிடுவதற்கான சரியான நேரம் இது என்பதால் நாங்கள் வெளியிடுகிறோம். அவர்களும் அதையே சிந்தித்திருப்பார்கள். இரண்டு பெரிய படங்கள் வெளியானாலும், எங்கள் படத்திற்கு ஒரு இடம் இருக்கும்.

நான் விஜய்யின் மிகப்பெரிய ரசிகன். அவருடைய படங்களை விரும்பி பார்ப்பேன். பீஸ்ட் ஒரு அற்புதமான படமாக இருக்கும் என நான் நம்புகிறேன். அதேபோல், கேஜிஎப் 2 மக்கள் மிகவும் விரும்பும் ஒரு படத்தின் தொடர்ச்சியாகும். எல்லா படங்களுக்கும் தியேட்டர்களில் இடம் இருக்கும். ஒவ்வொன்றுக்கும் தனித்தனி மார்க்கெட் இருக்கிறது, நான்கு நாட்கள் விடுமுறை இருக்கிறது. எனவே அனைத்து படங்களும் நன்றாக ஓட வேண்டும். பெரிய படங்கள் ஒன்றாக வருவது பெரிய விஷயம். அதை நாம் நேர்மறையாக பார்க்க வேண்டும். என்கிறார் ஷாகித் கபூர்.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
ஜேம்ஸ் கேமரூனுக்கான இந்தியாவின் பதில் தான் ராஜமவுலி : அனில் கபூர் புகழாரம்ஜேம்ஸ் கேமரூனுக்கான இந்தியாவின் ... நடிகை சோனம் கபூரின் வீட்டில் ரூ.2.4 கோடி மதிப்பிலான நகை, பணம் கொள்ளை நடிகை சோனம் கபூரின் வீட்டில் ரூ.2.4 ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

NicoleThomson - chikkanayakanahalli , tumkur dt and Bangalore, ,இந்தியா
10 ஏப், 2022 - 06:31 Report Abuse
NicoleThomson ஓம்பாலே பில்ம்ஸ் ஓனருக்கும் டிகே சிவகுமாருக்கு உறவே இல்லை சார் அதனால் தயாரிப்பாளர் தெனாவட்டா இருக்க மாட்டாரு
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in