தக் லைப் : திட்டமிட்டதற்கு முன்பாகவே ஓடிடி ரிலீஸ்? | 7 வருடங்களுக்கு பிறகு தமிழில் நடிக்கும் விஜய் யேசுதாஸ் | கதை நாயகியான லிஸி ஆண்டனி | முகமூடி அணிந்து ரசிகர்களிடம் நேரடியாக பட விமர்சனம் கேட்ட அக்ஷய் குமார் | பிளாஷ்பேக் : கன்னட நாடகத் துறையின் புரட்சியாளர் | பிளாஷ்பேக் : என்ஜினீயர் மோகன், கிரேஸி மோகன் ஆனது எப்படி? | காஜல் அகர்வால் இயக்குனர் ஆகிறாரா? | த.வெ.க.,வில் இணைகிறாரா அர்ஜூன்? உண்மை என்ன? | திரையுலகில் 50 ஆண்டுகள்: பாக்யராஜ்க்கு பாராட்டு விழா | என்னது, ஸ்ருதிநாராயணன் படத்துக்கு தியேட்டர் கிடைக்கலையா? |
ராஜமவுலி இயக்கத்தில், ஜுனியர் என்டிஆர், ராம் சரண், ஆலியா பட் மற்றும் பலர் நடிக்கும் படம் 'ஆர்ஆர்ஆர்'. இப்படத்தின் பிரமோஷன் வேலைகளை படக்குழுவினர் பரபரப்பாக ஆரம்பித்துவிட்டார்கள்.
நேற்று மும்பையில் நடைபெற்ற ஹிந்திக்கான விழாவில் நடிகர் சல்மான்கான் கலந்து கொண்டு சிறப்பித்தார். நிகழ்ச்சியில் இயக்குனர் ராஜமவுலி, நடிகக்ரள் ஜுனியர் என்டிஆர், ராம்சரண், நடிகைகள் ஆலியா பட், ஸ்ரேயா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் பேசிய சல்மான்கான், “ஜுனியர் என்டிஆர் நடிப்பை நிஜமாக நேசிப்பேன், அவர் ஒரு யதார்த்த நடிகர். ஒவ்வொரு முறை ராம்சரணை சந்திக்கும் போது அவர் ஏதாவது ஒரு காயம்பட்டு ஓய்வில் இருப்பார். அவருடைய படங்களில் எப்போதாவது காயமடைந்துவிடுவார். அந்த அளவிற்கு அவர் கடினமாக உழைப்பார். அவர் மிகக் கடின உழைப்பாளி. 'ஆர்ஆர்ஆர்' படம் வெளியான பிறகு குறைந்தது நான்கு மாதங்களுக்காவது வேறு யாரும் படத்தை வெளியிடாமல் இருப்பது நல்லது. அந்த அளவிற்கு இந்தப் படம் மீதான எதிர்பார்ப்பு அதிகம் உள்ளது,” என்றார்.
ஆர்ஆர்ஆர் படம் ஜனவரி 7ம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது.