Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சினி வதந்தி »

நமீதாவின் பப்ளிசி(கு)ட்டி ஸ்டண்ட்

05 நவ, 2012 - 11:27 IST
எழுத்தின் அளவு:

நமீதாவுக்கு கையில் ஒரு படம் கூட இல்லை. ஆனால் அவர் அடிக்கிற பப்ளிசி(கு)ட்டி ஸ்டண்டுக்கு அளவே இல்லை. அதற்கென ஒரு தனி மானேஜர் வைத்துக்கொண்டு திட்டமிட்டு தனது செய்தியும், படமும் மீடியாக்களில் வருவது மாதிரி பார்த்துக் கொள்கிறார். கார் பயணம் செய்யும்போது திடீரென்று அழையாத திருமணத்துக்கு சென்று படம் பிடித்து அதையும் செய்தியாக்கி விடுவார். ஏதாவது விழாக்களுக்கு போனால் என்னை ரசிகர்கள் கிள்ளி விட்டார்கள் என்று அதிரடியாக உள்ளூர் மீடியாக்களுக்கு தீனி கொடுப்பார். கூட்ட நெரிசலில் ஒருவர் இறந்து விட்டால், நமீதாவை பார்க்க முடியாத ஏக்கத்தில் ரசிகர் சாவு என செய்தி பறக்கும். திடீரென இணைய தளத்தில் அதிகம் தேடப்படும் பெண் நமீதாதான் என்ற புள்ளி விபரம் மீடியாக்களுக்கு தரப்படும், இதுதவிர எந்த விழாவில் கலந்து கொண்டாலும் படு கவர்ச்சியாக உடை அணிந்து பிளாஷ் வெளிச்சத்தில் குளித்துக் கொள்வார். இந்த வரிசையில் இப்போது ஜப்பான் டி.வி ஒன்று நமீதாதான் இந்திய பெண்களில் அழகு என்று ஒரு செய்தியை தட்டி விட்டிருக்கிறார் நமீதா.

தன்னை எப்படி விளம்பரப் படுத்திக் கொள்வது என்று நமீதா ஒரு புத்தகமே எழுதலாம். அத்தனை திட்டங்கள் அவர் கைவசம் இருக்கிறது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் இவருக்கும் அரசியல் ஆசையா? இவருக்கும் அரசியல் ஆசையா?

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)