இளம் நடிகருடன் காதலா? - கோட் நடிகை விளக்கம் | ஏஆர் ரஹ்மான் பிரிவுக்கும், மோகினி டே பிரிவுக்கும் சம்பந்தம் இல்லை: சாய்ரா பானு வழக்கறிஞர் விளக்கம் | என் மகளை மீட்டு தந்தது செட்டிக்குளங்கரா தேவி தான் : நயன்தாரா அம்மா உருக்கம் | மலையாள வாரிசு வில்லன் நடிகர் மேகநாதன் மறைவு | கிஸ் படத்திலிருந்து அனிரூத் விலகலா? | சம்பந்தி இது சரியில்லை : ‛ராஜாகிளி' பட விழாவில் அர்ஜூன் கலாட்டா | ராம் பொதினேனிக்கு ஜோடியான பாக்யஸ்ரீ போர்ஸ் | சிவகார்த்திகேயனுக்கு வில்லனா? மறுப்பு தெரிவித்த விஷால் | ஹாலிவுட் மியூசிக் மீடியா விருது: ஆடுஜீவிதம் பின்னணி இசைக்காக வென்றார் ஏ.ஆர்.ரஹ்மான் | விஜய் 69வது படத்தில் இணையும் வரலட்சுமி |
தமிழ் சினிமா வசூல் 2023ம் ஆண்டில் மொத்தமாக 2500 கோடி வசூலைக் கடந்திருக்க வாய்ப்புள்ளது என்று பார்த்தோம். ஆனால், ஷாரூக் நடித்து வெளிவந்த மூன்றே ஹிந்திப் படங்கள் மூலம் அந்த 2500 கோடி வசூல் கிடைத்துள்ளது.
ஷாரூக்கான் நடித்து வெளிவந்த 'ஜவான்' படம் 1100 கோடி வசூலையும், 'பதான்' படம் 1000 கோடி வசூலையும் பெற்றது. ஒரே ஆண்டில் இரண்டு 1000 கோடி வசூலைப் பெற்ற முதல் நாயகன் என்ற பெயரைப் பெற்றார். அதோடு ஷாரூக் நடித்து வெளிவந்த 'டங்கி' படம் 400 கோடி வசூலைக் கடந்துள்ளது. ஆக, ஷாரூக்கின் மூன்று படங்களின் மூலம் 2500 கோடி வசூல் கிடைத்துள்ளது தனித்த சாதனை.
கடந்த ஆண்டில் இந்திய அளவில் அதிக வசூலைக் குவித்த படமான 'ஜவான்' படத்தை இயக்கியது தமிழ் இயக்குனரான அட்லீ என்பதும் முக்கியமான ஒன்று.
அதற்கடுத்து ரன்பீர் கபூர் நடித்து வெளிவந்த 'அனிமல்' படம் 800 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளது. இந்தப் படத்தை தெலுங்கு இயக்குனரான சந்தீப் ரெட்டி வங்கா இயக்கியுள்ளார். அட்லியுடன் சேர்த்து இரண்டு தென்னிந்திய இயக்குனர்கள் இயக்கிய ஹிந்திப் படங்கள் மூலமே 2000 கோடி வசூல் வந்துள்ளது பாலிவுட் இயக்குனர்களுக்கு அதிர்ச்சியான ஒன்று.
சன்னி தியோல் நடித்த 'கடார் 2' 600 கோடிக்கு அதிகமாகவும், சல்மான் கான் நடித்த 'டைகர் 3' படம் 400 கோடிக்கு அதிகமாகவும், ரன்வீர் சிங் நடித்த 'ராக்கி ஹெர் ராணி கி பிரேம் கஹானி' படம், பிரபாஸ் நடித்த 'ஆதி புருஷ்' படம், பரபரப்பை ஏற்படுத்திய 'த கேரளா ஸ்டோரி' ஆகிய படங்கள் தலா 300 கோடிக்கு அதிகமாகவும், அக்ஷய்குமார் நடித்த 'ஓஎம்ஜி 2 படம் 200 கோடிக்கு அதிகமாகவும், வசூலித்துள்ளன.
அதிகமான வசூலைக் குவித்த இந்த படங்கள் மூலமாக மட்டும் 5700 கோடி வரை வசூலாகியுள்ளது. இதர படங்களின் வசூலை சேர்த்தால் ஒட்டு மொத்தமாக ஹிந்தித் திரையுலகின் கடந்த வருடத்திய வசூல் 6000 கோடியைக் கடந்திருக்கும்.
'பாகுபலி 2, கேஜிஎப் 2, ஆர்ஆர்ஆர்' போன்ற தென்னிந்திய படங்களின் தாக்கத்தால் அதற்கு முந்தைய சில வருடங்களில் ஹிந்தித் திரையுலகம் தடுமாறி இருந்தது. அதை ஷாரூக்கான் உள்ளிட்ட சில ஹீரோக்கள் சரி செய்து மீட்டு கொண்டு வந்துள்ளனர்.
இழந்த பெருமையை மீட்ட ஹிந்தித் திரையுலகம் அதைத் தொடர்ந்து தக்க வைத்துக் கொள்ளுமா அல்லது பான் இந்தியா படங்களாக இந்த ஆண்டில் வர உள்ள பல தென்னிந்திய படங்களின் போட்டிகளை சமாளிக்குமா என்பதைப் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.