பாட்டு பாடி, பழைய நினைவுகளை பகிர்ந்து பாரதிராஜாவை தேற்றிய கங்கை அமரன் | பெண் குழந்தைக்கு தந்தையான ரெடின் கிங்ஸ்லி | துருவ நட்சத்திரம் : காத்திருக்கும் விக்ரம் | 25 வயதில் மகன் இருக்கையில் தந்தையாக நடிக்க தயங்கும் ஹீரோக்கள் : சசிகுமார் ஆதங்கம் | அருண் விஜய் படத்திற்கு பாடல் பாடிய தனுஷ் | அமெரிக்காவில் ஏப்., 9ல் குட் பேட் அக்லி பிரீமியர் காட்சி | முதல் கடார் என் சினிமாவை மூடியது... இண்டாவது கடார் திறந்து வைத்தது : சன்னி தியோல் | அண்ணன் கடனை என்னால் அடைக்க முடியாது: கோர்டில் நடிகர் பிரபு தகவல் | பிளாஷ்பேக்: சமகாலத்தில் எடுக்கப்பட்டு சாதனையையும், வேதனையையும் சந்தித்த இரண்டு “ஞானசௌந்தரி”கள் | 'ரெட்ரோ' டப்பிங் பணிகளை நிறைவு செய்த சூர்யா |
2022ம் ஆண்டிலும் முந்தைய வருடங்களைப் போலவே அதிகமான புதுமுகங்கள் அறிமுகமாகி உள்ளார்கள். புதுமுகங்களைப் பொறுத்தவரையில் படங்கள் ஓடினாலோ, அவர்கள் நடித்த பாடல்கள் சூப்பர் ஹிட் ஆனால் மட்டுமோதான் அதிகம் கவனிக்கப்படுவார்கள். இந்த ஆண்டில் அப்படி கவனிக்கப்பட்டவர்கள் ஒரு சிலர்தான்.
கிரித்தி ஷெட்டி
தெலுங்கில் 'உப்பெனா' படம் மூலம் அறிமுகமாகி குறுகிய காலத்தில் புகழ் பெற்ற கிரித்தி ஷெட்டி, தமிழ், தெலுங்கில் தயாரான 'த வாரியர்' படம் மூலம் தமிழில் அறிமுகமானார். படம் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை என்றாலும், 'புல்லட் சாங்' பாடல் மூலம் பிரபலமானார். அடுத்து பாலா இயக்கத்தில் 'வணங்கான்' படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி நடித்து வந்தார். படத்தில் சூர்யா விலகிவிட்டதால் தற்போது கிரித்தியும் இருக்கிறாரா இல்லையா என்பது பின்னர்தான் தெரிய வரும்.
அதிதி ஷங்கர்
'விருமன்' படத்தின் மூலம் இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் கதாநாயகியாக அறிமுகமானார். படத்தில் அவர் நடித்துப் பெயர் வாங்கியதை விட அப்படம் சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகளில், பேட்டிகளில் அவர் சொன்ன 'கடி' ஜோக்குகளால் பிரபலமானார். அறிமுகப் படத்தில் தேர்ச்சி பெற்றுவிட்டாலும் இனி அவர் நடித்து வெளிவரும் படங்கள்தான் அவருக்கு தேர்வாக அமையும். தற்போது சிவகார்த்திகேயன் ஜோடியாக 'மாவீரன்' படத்தில் நடித்து வருகிறார்.
ஸ்ரீநிதி ஷெட்டி
'கேஜிஎப்' கன்னடப் படத்தின் மூலம் பிரபலமான ஸ்ரீநிதி ஷெட்டி 'கோப்ரா' படத்தின் மூலம் இங்கு கதாநாயகியாக அறிமுகமானார். படம் பெரிய அளவில் போகவில்லை, கதாநாயகிக்குப் படத்தில் பெரிய முக்கியத்துவம் இல்லை என்பதால் அறிமுகப் படத்தில் ஸ்ரீநிதியால் அதிகப் பெயரை வாங்க முடியவில்லை.
சித்தி இட்னானி
'வெந்து தணிந்தது காடு' படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் சித்தி இட்னானி. ஆக்ஷன் படம்தான் என்றாலும் படத்தில் இடம் பெற்ற காதல் காட்சிகளால் கவனிக்கப்பட்டவர் சித்தி. குறைவான காட்சிகள் என்றாலும் இயல்பான ஒரு அழகால் ரசிகர்களை அறிமுகப்படத்திலேயே ஈர்த்துவிட்டார். தற்போது ஆர்யா ஜோடியாக ஒரு படத்திலும், 'நூறு கோடி வானவில்' என்ற படத்திலும் நடித்து வருகிறார்.
தியேட்டர்கள் ஓடிடி என 220 படங்கள் வரை இந்த ஆண்டில் வெளிவந்தாலும் ஒரு சில ஹீரோயின்கள் மட்டுமே ஓரளவிற்கு எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளார்கள். மேலே குறிப்பிட்ட அறிமுக நடிகைகள் அடுத்தடுத்து எப்படிப்பட்ட படங்களில் நடிக்கிறார்கள் என்பதைப் பொறுத்தே அவர்களது எதிர்காலம் தமிழ் சினிமாவில் அமையும்.