‛டூரிஸ்ட் பேமிலி' பட டப்பிங் பணியில் சசிகுமார் | திரையுலகில் 22 ஆண்டுகள் : சூர்யா 45 படப்பிடிப்பில் த்ரிஷா கேக் வெட்டி கொண்டாட்டம் | படைதலைவன் படத்தின் டிரைலரில் தனது ஹிட் பாடலுடன் முகம் காட்டிய விஜயகாந்த் | அல்லு அர்ஜுனுக்கு ஆதரவாக குரல் கொடுத்த ராஷ்மிகா - நானி | பிளாஷ்பேக் : விசுவை சினிமா நடிகராக்கிய எஸ்.பி.முத்துராமன் | பிளாஷ்பேக் : கண்ணாம்பா வசனத்தால் தோல்வி அடைந்த படம் | 'கொரோனா குமார்' வழக்கு முடித்து வைப்பு | லண்டன் இசை பள்ளியின் கவுரவத் தலைவராக ஏ.ஆர்.ரஹ்மான் நியமனம் | ஹீரோ ஆனார் ரோபோ சங்கர் | மற்றுமொரு ஓடிடி தளத்தில் ‛ஹிட் லிஸ்ட்' |
எத்துறையிலும் படிப்படியாக தான் முன்னேற முடியும். ஆரம்பத்தில் ஏற்படும் தோல்விகளால் ஓடிப்போனால் வெற்றியை சுவைக்க முடியாது. ஹீரோயின் ஆன பிறகு ஆரம்பத்தில் அவர்கள் பட்ட கஷ்டங்களை நடிகைகள் சொல்வதை படித்திருப்போம். முன்னேறி வரும் ஒரு துணை நடிகை தன் அனுபவத்தை இங்கே கூறுகிறார். அவர் சென்னையை சேர்ந்த மரிய ரோஸ்லின்.
அப்பா பர்மாவை சேர்ந்தவர். அம்மா கன்னியாகுமரி மாவட்டம். நான் சென்னையில் வளர்ந்தவள். சிறுவயதிலிருந்தே என்னை நிகழ்ச்சிகளுக்கு அம்மா அழைத்து செல்லும் போது மேக்கப் செய்து ஹீரோயின் போல் அழைத்து செல்வார். என்னை பார்ப்பவர்கள், நடிகை சினேகாவை போல் இருப்பதாக கூறுவார்கள். அப்போது எனக்கு சினிமா ஆசை துளிர்விட்டது. பள்ளிக்காலத்தில் நடனம், நாடகம் என அசத்துவேன். எனவே எனக்கு அதற்கான தகுதி இருப்பதாக உணர்ந்தேன்.
நம்ப மாட்டீர்கள்... 11 வயதில் பள்ளி தோழி ஒருவரின் மூலமாக சினிமா ஆடிஷன்கள் நடப்பதை தெரிந்து பங்கேற்றேன். 13 வயதில் 'அடங்கமறு' படத்தில் சிறிய வேடத்தில் நடித்தேன். ஷூட்டிங் நடக்கும் போது துாரமாக நிற்க வைத்து விட்டார்கள். படம் வெளியானதும் என் முகமே தெரியவில்லை. ஆனால் முதல் சம்பளமாக ரூ.300 கிடைத்தது. சிறு சிறு வேடங்களில் நடித்த போது எந்த மரியாதையும், அறிமுகமும் கிடைக்கவில்லை. ஆனால் ஒரு நாள் ஹீரோயினாக மாற வேண்டும் என்ற ஆசை மட்டும் எனக்குள் அடிக்கடி வந்தது. 10ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு முந்தைய நாள் காலையில் என் அலைபேசி எண்ணுக்கு ஒரு உதவி இயக்குநர் தொடர்பு கொண்டு உங்களுக்கு 'கணேசபுரம்' படத்தில் துணை நடிகையாக வாய்ப்பு தருகிறோம். 45 நாட்கள் மதுரையில் படப்பிடிப்பு. நீங்கள் அதிகாலை 5:00 மணிக்கு மதுரை வந்து விடுங்கள் என்றார்.
பொதுத்தேர்வா, நடிப்பா என எனக்குள் கேள்வி எழுப்பி வீட்டில் பெற்றோருக்கு தெரியாமல், அணிந்திருந்த தங்க செயினை அடகு வைத்த பணத்தை கொண்டு மதுரைக்கு ரயில் ஏறினேன். ரயிலில் நிற்க இடம் இல்லை. அப்போது எனக்கு மாதவிடாய் ஏற்பட்டது. அதற்குரிய எதுவும் கொண்டு வராததால் சிரமப்பட்டேன். மதுரை வந்ததும் உதவி இயக்குநரின் அலைபேசியில் தொடர்பு கொண்டேன். அவர் எடுக்கவில்லை. என்ன செய்வது என தெரியாமல் ரயில்வே ஸ்டேஷனில் அமர்ந்திருந்தேன். பணமும் இல்லை. சென்னை திரும்பலாமா என நினைத்தேன்.
இருந்தாலும் கனவுகளை நோக்கி பயணிக்க வேண்டும் என்ற துணிச்சல் மட்டும் இருந்தது. மதியம் பேசிய நபர் ஷூட்டிங் நடக்கும் இடத்தை கூறி பஸ்சில் வாருங்கள் எனக் கூற குழப்பத்துடன் நின்றேன். பின்னர் ஒரு வழியாக இயக்குனர் கார் அனுப்பினார். போனேன்... நல்ல வேளை... எனக்கு நடிக்க வாய்ப்பு கிடைத்தது.
இதனிடையே என்னை காணவில்லை என்று பெற்றோர் போலீசில் புகார் கொடுத்தனர். அலைபேசியில் அழைத்து நான் சினிமாவில் நடிப்பதற்காக மதுரை வந்து விட்டேன். பத்திரமாக இருக்கிறேன் எனக்கூற அவர்களும் என் மீதுள்ள நம்பிக்கையில் நடித்து விட்டுவா என்றனர். அந்த படத்தில் நான் வாழ்நாளில் படாத கஷ்டத்தை பட்டுள்ளேன். அதன்பின் 'பூமி' படத்தில் நிருபராகவும், 'பீஸ்ட்'படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்தேன். இதுவரை 50 படங்களில் சிறிய வேடங்களில் நடித்துள்ளேன்.
தெலுங்கில் 'கீதாஞ்சலி', தமிழில் 'இந்திரா' சீரியலில் நடித்தேன். பெஸ்ட் போட்டோகிராபி பேஸ், குயின் ஆப் மெட்ராஸ் விருதுகள் பெற்றேன். தற்போது உப்பு, புளி, காரம் எனும் வெப்சீரிசில் நடித்து வருகிறேன். ஹீரோயின் ஆவேன் என்ற நம்பிக்கையில் தொடர்ந்து முயற்சி செய்கிறேன் என்றார்.