அழகுக்காக ஸ்ரீதேவி பட்ட சிரமம் : போனி கபூர் தகவல் | 'வேவ்ஸ்' ஓ.டி.டி., தளம் : பிரசார் பாரதி துவக்கம் | நவ.26ம் தேதியில் விடுதலை-2 படத்தின் இசை வெளியீட்டு விழா | தெலுங்கில் அறிமுகமாகும் மமிதா பைஜூ | திருமணத்திற்கு தயாராகும் தமன்னா | திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்த சந்தானம் | நடிகை சீதா வீட்டில் நகை திருட்டு : போலீசில் புகார் | சமந்தா சொல்வது உண்மைதான் : அர்ஜுன் கபூர் ஒப்புதல் | சர்ச்சைகளை நீர்த்துப்போக செய்யும் விதமாக தயாராகிறதா மோகன்லால் - மம்முட்டி படம்? | அபிநட்சத்திரா நடிக்கும் அன்னம் தொடரின் புரோமோ ரிலீஸ் |
சினிமாவில் செல்வாக்கை பயன்படுத்தி பலரும் சாதிக்கும் நிலையில் சிலர் எந்த பின்புலமும் இல்லாமல் திறமையை மட்டும் நம்பி வெற்றி பெறுகின்றனர். அப்படிப்பட்டவர் தான் சென்னையை சேர்ந்த இளம் நடிகை பிரிகிடா சகா. இவரை பவி டீச்சர் என்று சொன்னால் தான் அனைவருக்கும் தெரியும். அந்த அளவிற்கு ரசிகர்கள் மத்தியில் இடம் பிடித்துள்ளார்.
இவர் தினமலர் சண்டே ஸ்பெஷல் பகுதிக்காக மனம் திறந்ததாவது : படித்தது, வளர்ந்தது சென்னை தான். அப்பா, அம்மா 2 பேருமே வேலை செய்கிறார்கள். நான் பி.எஸ்.சி., விஷூவல் கம்யூனிகேஷன் படித்தேன். நண்பர்களுடன் சேர்ந்து குறும்படங்களில் நடித்தேன். அந்த ஆர்வம் சினிமாவில் நுழைவதற்கு துாண்டுகோலாக மாறியது. 2018ல் துருவ் விக்ரம் நடித்த 'வர்மா' படத்தில் ஹீரோயின் தோழியாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அது நான் நடித்த முதல் படம்.
அதன்பின் 'ஆஹா கல்யாணம்' வெப்சீரிசில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அதில் 'பவி டீச்சர்' எனும் கதாபாத்திரத்தில் நடித்து முழு திறமையையும் வெளிக்காட்டினேன். அது கல்லுாரி மாணவர்கள், இளைஞர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று தந்தது. பார்க்கும் இடங்களிலெல்லாம் பவி டீச்சர் என்று அழைக்க தொடங்கினார்கள். இப்படி மக்கள் மத்தியில் வைரலானதால் 2019ல் எனக்கு 'வைரல் ஸ்டார்' என்ற விருது வழங்கினார்கள்.
அதன்பின் விஜய் நடித்த 'மாஸ்டர்' படத்தில் மாணவியாக நடிக்க வாய்ப்பு வந்தது. சிறிய கதாபாத்திரம் என்றாலும், பெரும் வாய்ப்பாக நினைத்து விஜய்யுடன் நடித்தேன். இது என் திரை வாழ்வின் மறக்க முடியாத படிக்கட்டாக உள்ளது.
கல்லுாரி புராஜட்டுக்காக உதவி இயக்குநராக பணியாற்ற நடிகர் பார்த்திபனை அணுகினேன். அப்போது 'இரவின் நிழல்' படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றினேன். என் திறமையை பார்த்து அவரே நீங்கள் இரவின் நிழல் படத்தின் 2வது கதாநாயகியாக நடிக்க வேண்டும் என்றார். நானும் நடித்தேன். அந்த படமும் நல்ல வரவேற்பை தந்தது. சினிமாவை பற்றி எதுவுமே தெரியாமல் வந்து விட்டேன். ஒவ்வொரு விஷயத்திலும் அடிபட்டு கொஞ்சம் கொஞ்சமாக கற்றுகொண்டிருந்தேன்.
மீண்டும் வாய்ப்புக்காக காத்திருந்தேன். முகேன்ராவ் நடித்த 'வேலன்' படத்தில் அவருக்கு மாமா பொண்ணாக நடிக்க வாய்ப்பு வந்தது. அதை முடித்து 'சுள்ளான் சேது' படத்தில் ஹீரோவுக்கு சகோதரியாக நடித்தேன்.
தெலுங்கில் ஹீரோயினாக 2 படங்கள் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அந்த படத்தை முடித்து விட்டு தமிழ் சினிமாவுக்கு வந்தேன். சூரி நடித்த 'கருடன்' படத்தில் நல்ல கதாபாரத்திரத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது.
அக்கா, தங்கை, தோழி கதாபாத்திரங்களில் நடித்தால் கடைசி வரை அதை மட்டும் தான் செய்ய வேண்டுமோ ஹீரோயினாக நடிக்க வாய்ப்புகள் இருக்காதோ என்ற பயம் எப்போதும் இருக்கிறது.
படங்களில் நடிக்க நீங்கள் வேண்டும் என்று சொல்லிவிட்டு கடைசி நேரத்தில் வாய்ப்பு இல்லை என சிலர் என்னை புறக்கணித்தார்கள். புறக்கணிப்புகளை தாண்டி போராடுவதற்கு நான் முயற்சித்தேன். காத்திருந்ததற்கு பரிசாக 'கோழிப்பண்ணை செல்லத்துரை' படத்தில் ஹீரோயினா நடித்தேன். அந்த படம் வெளியாக உள்ளது. தற்போது விஜய் ஆண்டனியுடன் ஹீரோயினாக படம் நடித்து கொண்டிருக்கிறேன். இதை தக்கவைக்க முன்பை விட வேகமாக ஓடிக்கொண்டிருக்கிறேன்.
நிறத்தை வைத்து பல நிராகரிப்புகளை சந்தித்துள்ளேன். தற்போது சாதிக்க நிறம் முக்கியமல்ல திறமை தான் முக்கியம் என நிரூபித்துள்ளேன். மக்களுக்கு பிடித்த நல்ல நடிகையாக இருக்க வேண்டும் என்பது என் ஆசை, என்றார்.